Last Updated : 30 Sep, 2015 08:24 AM

 

Published : 30 Sep 2015 08:24 AM
Last Updated : 30 Sep 2015 08:24 AM

பொன்னேரிக்கரை ரயில் நிலையம் அருகில் மேம்பால பணிகள் விரைவில் தொடக்கம்: பொதுப்பணி, தொல்லியல் துறை ஒப்புதல்

காஞ்சிபுரம் , பொன்னேரிக்கரை புதிய ரயில் நிலையம் அருகில், ரயில்வே மேம்பாலம் அமைக்க தொல்லியல் மற்றும் பொதுப் பணித்துறை ஒப்புதல் கிடைத் துள்ளதால், திட்டமதிப்பீடு தயாரிக் கப்பட்டு அரசு அனுமதியுடன், விரைவில் பணிகள் தொடங்க உள்ளதாக நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம், பொன்னேரிக்கரை பகுதயில் புதிய ரயில் நிலையம் அருகே, சென்னை செல்லும் சாலை உள்ளது. காஞ்சிபுரம் பகுதி மக்கள், சென்னை செல்வதற்கான பிரதான சாலையாக விளங்கி வரும் இச்சாலையில், புதிய ரயில் நிலையம் அருகே ரயில்வே கடவுப்பாதை அமைந்துள்ளது. ரயில் வரும் நேரங்களில் கடவுப் பாதை மூடப்படுகிறது. அதனால், சாலையின் இரு புறமும், நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது.

மேலும், காலை மற்றும் மாலை நேரங்களில், கடவுப் பாதை மூடப்படுவதால் பள்ளி மாண வர்கள் மற்றும் பணிக்கு செல் வோர் பெரிதும் சிரமப்பட்டு வருகின் றனர். இதனால், கடவுபாதை அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, கடந்த 2011-ம் ஆண்டு ரயில்வே கடவுபாதை அருகே ரூ. 49.4 கோடி செல வில் ரயில்வே மேம்பாலம் அமைக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதைதொடர்ந்து, மேம்பாலத்துக்கான பூர்வாங்க பணிகள் தொடங்கின. மேம்பாலம் அமைய உள்ள பகுதியில் மண் பரிசோதனை செய்யப்பட்டது. இருப்பினும் பாலம் கட்டப்பட வுள்ள பகுதியில் தொல்லியல் துறை கட்டுபாட்டில் உள்ள இறவாதீஸ்வரர் கோயிலும் பொதுப்பணித்துறை ஏரியும் அமைந்துள்ளதால், நிலம் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால், மேற்கண்ட இரண்டு துறைகளின் ஒப்புதல் கிடைக்க வில்லை. மேலும், சில தனியார் நிலங்களை கையகப் படுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதனால், மேம்பாலத்தின் வரை படம் இரண்டு முறை மாற்றி அமைக்கப்பட்டு, இரண்டு துறை களின் ஒப்புதலுக்காக நெடுஞ் சாலைத்துறை அனுப்பியது. எனினும், ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. 4 ஆண்டுகல் கடந்தும் மேம்பால பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், தற்போது ரயில்வே மேம்பாலத்துக்கு தொல் லியல்துறை மற்றும் பொதுப் பணித்துறையின் ஒப்புதல் கிடைத் துள்ளதாக நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. இதனால், விரைவில் ரயில்வே மேம்பாலத் தின் பணிகள் தொடங்க உள்ளன.

இதுகுறித்து, ரயில்வே மேம்பால பணிகள் நெடுஞ் சாலைத்துறை பொறியாளர் சந்திர சேகர் கூறியதாவது: தொல்லியல் துறை கட்டுபாட்டில் உள்ள கோயில் பகுதியிலும், பொன் னேரிக்கரையை ஒட்டியும், மேம்பாலத்துக்கு நிலம் தேவைப் படுவதால் இரண்டு துறைகளின் ஒப்புதல் கோரப்பட்டது. தற்போது, 2 துறைகளின் ஒப்புதல் கிடைத் துள்ளது. இதைதொடர்ந்து, மேம் பாலத்துக்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அளித்துள்ளோம். ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் பணிகள் தொடங்கப்படும்,என்றார்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் நகர மக்கள் கூறியதாவது: நெடுஞ் சாலைதுறை மற்றும் ரயில்வே துறையினர் விரைவாக செயல் பட்டு பணிகளை தொடங்க வேண்டும். நெரிசலில் நாள்தோறும் சிக்கி தவிக்கும் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x