Last Updated : 01 Sep, 2015 07:47 AM

 

Published : 01 Sep 2015 07:47 AM
Last Updated : 01 Sep 2015 07:47 AM

திருச்சி, மதுரை, கோவை மாவட்ட மைய நூலகங்களில் புத்தகத் திருட்டை காட்டிக்கொடுக்கும் கருவி பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

நூலகத்தில் இருந்து புத்தகங்கள் திருடுபோவதைத் தடுக்கும் வகையில் திருச்சி, மதுரை, கோவை ஆகிய மாவட்ட மைய நூலகங் களுக்கு தலா ரூ.50 லட்சத்தில் ஆர்எப்ஐடி (radio frequency identification) தொழில்நுட்பத்தில் செயல்படும் கருவியைப் பொருத்த கடந்த ஆண்டு அரசு அறிவிப்பு வெளியிட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ரகசிய குறியீடு வில்லை ஒட்டப் பட்ட நூலை கணினியில் பதிவேற் றாமல் நூலகத்திலிருந்து வெளியே எடுத்துச் சென்றால் நுழைவுவாயி லில் அமைக்கப்படும் இக்கருவி ஒலி எழுப்பி திருட்டைக் காட்டிக் கொடுக்கும்.

திருச்சி மாவட்ட மைய நூலகத் தின் நுழைவுவாயிலில் நிறுவப்பட் டுள்ள இக்கருவிக்கு மின் இணைப்பு கொடுக்காததால், ஒப்பந்தம் கொடுத்து ஓராண்டுக்கு மேலாகியும் இத்திட்டம் பயன்பாட்டுக்கு வரவில்லை.

திருச்சியில் இப்படி என்றால், மதுரை, கோவை மாவட்ட மைய நூலகங்களில் இந்தக் கருவி அமைக்கப்படவே இல்லை. ஆனால், 3 நூலகங்களில் இருந்தும் ஆர்எப்ஐடி தொழில்நுட்ப கருவி பொருத்த ஒப்பந்ததாரருக்கு பல லட்ச ரூபாய் இதுவரை வழங்கப் பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஸ்கேன் கருவி எங்கே?

நாளிதழ்களை ஸ்கேன் செய்து கணினியில் பதிவேற்றம் செய்ய சுமார் ரூ.25 லட்சத்தில் ஸ்கேனர் வாங்க, மாதிரி நூலகத் திட்டத்தின் கீழ் திருச்சி, கோவை, காஞ்சிபுரம் மாவட்ட மைய நூலகங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் அதுவும் இதுவரை எல்காட்டிலிருந்து வரவில்லை.

நூலக அறிவியல் படித் தவரையே நூலகத் துறை இயக்குநராக நியமிக்க வேண்டும் என்று ஒரு வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், பள்ளிக் கல்வி இயக்குநர் கூடுதலாக நூலகத்துறை இயக்குநர் பொறுப்பை கவனித்து வருவதும், மேம்பாட்டு பணிகளில் உள்ள தொய்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.

மதுரை மாவட்ட மைய நூலக அலுவலர் ரவீந்திரன், கோவை மாவட்ட மைய நூலகர் கார்த்திகேயன், திருச்சி மாவட்ட மைய நூலக அலுவலர் (பொறுப்பு) பாலகிருஷ்ணன் ஆகியோர் கூறும் போது, “ஆர்எப்ஐடி தொழில்நுட்பத் தில் செயல்படும் கருவியை பொருத்த உரிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விதிகளின்படியே ஒப்பந்ததாரருக்கு பணம் வழங்கப்பட்டது” என்றனர்.

சட்டப்பேரவையில் இன்று (செப்.1-ம் தேதி) கல்வி மானியக் கோரிக்கை நடைபெறவுள்ள நிலையில், நூலகத் துறையில் நிலவும் இதுபோன்ற சிக்கல்களுக்கு அரசு முடிவு கட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x