Published : 18 Jul 2020 08:13 AM
Last Updated : 18 Jul 2020 08:13 AM

கரோனா நோயாளிகளின் உணவு, மருந்துக்காக திருச்சி, தஞ்சை, கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

சென்னை

திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கரோனா நோயாளிகளுக் கான கோவிட் கேர் சென்டர், உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த ரூ.4 கோடியே 9 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது சென்னையில் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இதர மாவட்டங்களில் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனால், அந்த மாவட்டங்களுக்கு தேவை யான படுக்கை வசதிகள், நோயாளிகளுக்கான வசதிகளை செய்து தர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள் ளது. குறிப்பாக, அறிகுறி இல்லாத கரோனா நோயாளிகள், வெளிநாடுகளில் இருந்து வந்து அரசு தனிமைப்படுத்துதல் முகாமில் இருப்பவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும்.

அந்த வகையில் திருச்சி, தஞ்சை, திருவண்ணாமலை, கடலூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த, நோயாளிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உணவு உள்ளிட்டவற்றை வழங்க, ஏற்கெனவே செலவிடப் பட்டதற்கான தொகையை வழங்க வும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் கோரிக்கை விடுத்தன.

இந்த கோரிக்கைகளை தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் பரிசீலித்து, உரிய தொகைகளை மாவட்டங்களுக்கு வழங்கும்படி அரசுக்கு பரிந்துரைத்தார். அந்த பரிந்துரையை ஏற்று, திருச்சி மாவட்டத்துக்கு ரூ.1 கோடியே 1 லட்சத்து 84 ஆயிரத்து 686, தஞ்சை மாவட்டத்துக்கு ரூ.93 லட்சத்து 43 ஆயிரத்து 250, திருவண்ணாமலைக்கு ரூ.90 லட்சம், கடலூர் மாவட்டத்துக்கு ரூ.50 லட்சம், சிவகங்கை மாவட்டத்துக்கு ரூ.74 லட்சத்து 13 ஆயிரத்து 800 என ரூ.4 கோடியே 9 லட்சத்து 41 ஆயிரத்து 436 என நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x