Published : 05 Sep 2015 11:32 AM
Last Updated : 05 Sep 2015 11:32 AM

தமிழ் மொழி படிக்கும் 300 நரிக்குறவர்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கற்கும் பாரதம் திட்டத்தின்கீழ் முதல் கட்டமாக 300 நரிக்குறவர்களுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 ஆயிரம் நரிக்குறவர்கள் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாமல் உள்ளனர். இவர்களுக்கு கற்கும் பாரதம் திட்டத்தின்கீழ் தமிழ் எழுதப் படிக்க வைக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளனர். இதன் முதல் கட்டமாக அரும்பருத்தி கிராமத்தில் உள்ள நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த 300 பேருக்கு கல்வி கற்பிக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்காக நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மற்றும் பட்டப் படிப்பு முடித்த 4 பேரை தேர்வு செய்துள்ளனர். இவர்களுக்கு கற்கும் பாரதம் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த சிறப்பு பயிற்சி அளித் துள்ளனர்.

இவர்களுக்கு தமிழ் எழுத்துக் கள், பேருந்துகளில் உள்ள ஊர் களின் பெயர்கள், சிறு சிறு வார்த்தைகளை எழுத்துக் கூட்டி படிக்கவும், எழுதவும் பயிற்சி அளிக்கப்படும். அதேபோல, இவர்களின் தொழில் வாய்ப்பு கள் பாதிக்காத வகையில் பினாயில் தயாரிப்பு, ஊது வத்தி, மெழுகுவர்த்தி, தையல், அலங்கார ஆபரணங்கள் தயாரிப்பு குறித்த தொழிற் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியை வெற்றிகரமாக முடிப் பவர்களுக்கு தொழில் வாய்ப்பு களுக்கான மூலப் பொருட்கள் வழங்கப்படும்.

இதுகுறித்து, தி.மலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்.குமார் கூறியதாவது:

கற்கும் பாரதம் திட்டத்தில் நரிக்குறவர்களுக்கு தமிழ் எழுதப் படிக்க 3 மாதம் பயிற்சியை தொடங்கி உள்ளோம். அத்துடன் 14 தொழிற்கல்வி பயிற்சியும் அவர்களுக்கு அளிக்கிறோம். பயிற்சியின் முடிவில் தேசிய திறந்த நிலைப் பள்ளி சார்பில் தேர்வு நடத்தப்படும்.

இதில், அடிப்படை தமிழ் பயிற்சி முடித்தவர்களுக்கு 2-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும். அடுத்தடுத்த கட்ட பயிற்சி பெறுபவர்களுக்கு 5 மற்றும் 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங் கப்படும். 2 ஆயிரம் நரிக் குறவர் களுக்கு கற்றுக் கொடுக்கப்படும். நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர் களே கல்வி பயிற்சி அளிப்பதால் சுலபமாக கற்றுக் கொள்வார்கள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x