Published : 03 Jul 2020 19:02 pm

Updated : 03 Jul 2020 19:02 pm

 

Published : 03 Jul 2020 07:02 PM
Last Updated : 03 Jul 2020 07:02 PM

அகரம் அகழாய்வில் நீள வடிவ பச்சை நிறப் பாசிகள் கண்டெடுப்பு

agaram-excavation-blue-beads-found
உள்படம்: அகரத்தில் நடந்த அகழாய்வில் கிடைத்த நீள வடிவ பச்சை நிற பாசி

திருப்புவனம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அகரம் அகழாய்வில் நீள வடிவ பச்சை வண்ண பாசிகள் கண்டெடுக்கப்பட்டன.

திருப்புவனம் அருகே கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணி பிப்.19-ம் தேதி நடந்து வருகிறது. கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன.

அவற்றில் செங்கல் கட்டுமானம், விலங்கு எலும்பு, மனித எலும்புகள், மண் பானைகள், ஓடுகள், சிறிய உலைகலன் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன.

அகரத்தில் ஆறு குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. இங்கு நீள வடிவ பச்சை நிற பாசிகள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை கீழடி பகுதியில் நடந்த அகழாய்வுகளில் வட்ட மற்றும் உருண்டை வடிவ பாசிகள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டன.

இந்நிலையில் முதன்முறையாக நீள வடிவ பாசிகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த நீளவடிவ பாசிகள் ராஜஸ்தான் மாநிலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளன.

மேலும் இந்த வகை பாசிகளை வியாபாரிகள், செல்வந்தர்கள் கழுத்தில் அணிந்துள்ளனர் என, தொல்லியல்துறையினர் தெரிவித்தனர்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

அகரம் அகழாய்வுநீளவண்ண பாசிகள் கண்டெடுப்புகீழடிஅகரம்கொந்தகைஅகழாய்வுOne minute news

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author