Published : 13 Jun 2020 11:29 am

Updated : 13 Jun 2020 11:29 am

 

Published : 13 Jun 2020 11:29 AM
Last Updated : 13 Jun 2020 11:29 AM

5 முன்னணி நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு: முதல்வர் பழனிசாமி கடிதம்

cm-palanisamy-writes-letter-to-companies-head-to-invest-in-tamilnadu
முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

சென்னை

5 முன்னணி நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்திட நேரடியாக அழைப்பு விடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூன் 13) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தமிழ்நாடு முதல்வர் வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டில் ஈர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முதலீடுகளை எளிதாக ஈர்ப்பதற்காக, நாடுகளுக்கான சிறப்பு அமைவுகளை உருவாக்குதல், வெளிநாட்டுத் தூதுவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல் மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்புப் பணிக்குழு அமைத்தல் என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் பரவல் உலகப் பொருளாதாரச் சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவுக்கு இடம் பெயர்ந்திட முடிவெடுத்துள்ளன. அண்மையில் 15 ஆயிரத்து 128 கோடி ரூபாய் முதலீட்டுக்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டன. இது இந்தப் பேரிடர் காலத்திலும் பன்னாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள தலைசிறந்த இடமாக தமிழ்நாட்டைக் கருதுவதை எடுத்துக்காட்டுகிறது.

உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஈர்ப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தற்பொழுது, கேட் ஸ்பேட் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் லிஸ்ஃப்ரேஸர், பாசில் குழுமத்தின் தலைவர் கோஸ்டா கார்ட்கோடிஸ், நைக் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் ஜான் டான்ஹூ, அடிடாஸ் ஏஜி நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் காஸ்பர் ரோர்ஸ்டட், மேட்டல் இங்க் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் யோனன் கிரைஸ் ஆகிய 5 முன்னணி நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்திட நேரடியாக அழைப்பு விடுத்து முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களையும் சிறப்பான தொழில் சூழலையும் குறிப்பிட்டு, புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும் அவர்களின் தேவைகளுக்கேற்ப ஊக்கச் சலுகைகளை வழங்கிடும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமிதமிழக அரசுமுன்னணி நுகர்வோர் நிறுவனங்கள்கரோனா வைரஸ்கொரோனா வைரஸ்Corona virusCM edappadi palanisamyTamilnadu governmentONE MINUTE NEWS

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author