Published : 15 May 2020 07:12 AM
Last Updated : 15 May 2020 07:12 AM

கரோனா குறித்த விழிப்புணர்வுக்காக ‘144 இன்னுயிர் காக்க’ வீடியோ- சென்னை காவல் துறை வெளியிட்டுள்ளது

கரோனா குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘144 இன்னுயிர் காக்க’ என்றகுறும்படத்தை சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ளது.

இயக்குநர் கே.வி.ஆனந்தின் உதவி இயக்குநரான ககா இயக்கியுள்ள இந்த குறும்படத்தை அண்ணா நகர் பரணீஸ்வரன் தயாரித்துள்ளார். கிப்ரான் இசையமைக்க, பிரசன்னா ஜி.கே. எடிட்டிங் செய்துள்ளார். ஒளிப்பதிவு வினோத் ராஜா. தங்கள் இன்னுயிரைப் பணயம் வைத்து, கரோனாவில் இருந்து மக்களை காக்கும் பணியில் இரவு பகலாகஈடுபட்டுள்ள சென்னை நகரகாவல் துறையினரை கவுரவப்படுத்தும் விதமாக இதை தயாரித்துள்ளதாக படக்குழுவினர் கூறினர்.

சென்னை மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் பி.விஜயகுமாரி இப்படத்தை தயாரிக்க ஆதரவு, வழிகாட்டுதலை வழங்கியதோடு அதில் நடித்தும் உள்ளார். வீட்டில்தனித்திருப்பதன் அவசியத்தை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட காவல்அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் இதில் தெரிவிக்கின்றனர்.

குறுகிய காலத்தில் இப்படம்உருவாக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் ஒருமுறைகூட நேரில் சந்திக்காமல் தொலைபேசி அழைப்பு, வீடியோகால் மூலமாகவே முழுபணிகளும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ட்விட்டரில் இந்த குறும்படத்தை இயக்குநர் கவுதம்மேனனும், நடிகர் சிவகார்த்திகேயனும் வெளியிட்டுள்ளனர். https://youtu.be/o7hLhpZ3ZPc என்ற யூ-டியூப் முகவரியிலும் இதை காணலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x