Last Updated : 02 May, 2020 04:29 PM

 

Published : 02 May 2020 04:29 PM
Last Updated : 02 May 2020 04:29 PM

கோயம்பேட்டில் இருந்து கடலூர் மாவட்டம் திரும்பிய 7 பேருக்கு கரோனா

பிரதிநிதித்துவப் படம்

விருத்தாசலம்

கோயம்பேட்டில் இருந்து திரும்பிய கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்களுக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் அண்மையில் கரோனா வைரஸ் தொற்றுக் குறித்து பரிசோதனை மேற்கொண்டனர். பரிசோதனை முடிவின்படி, தொற்றுள்ளவர்களை தனிமைப்படுத்த முயற்சித்து, அவர்களை தேடிய போது, பலர் அங்கிருந்து அவர்களது சொந்த ஊருக்குத் திரும்பியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அவ்வாறு சென்னையிலிருந்து சொந்த ஊர் திரும்பியவர்களின் பட்டியல், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த வகையில், கடலூர் மாவட்டத்தை சொந்த ஊராகக் கொண்டு திரும்பியவர்களை, மாவட்ட நிர்வாகம் அடையாளம் கண்டபோது, சுமார் 27 பேர் சொந்த ஊர் திரும்பியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்கள் இரு தினங்களுக்கு முன் சரக்கு வாகனம் மூலம் சொந்த ஊர் சென்றடைந்ததால், அவர்களை தனிமைப்படுத்திய மாவட்ட நிர்வாகம், அவர்களுடன் தொடர்பிலிருந்த 600 பேரைப் பிடித்து, அவர்களையும்,வேப்பூர், விருத்தாச்சலம், பண்ருட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி விடுதிகளில் தனிமைப்படுத்தி, பரிசோதனை மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனிடம் கேட்டபோது, "27 பேர் வந்ததில், 9 பேருக்குக் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 550 பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

இதேபோன்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு திரும்பிய 40 பேரை உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிகளில் கண்டுபிடித்த மாவட்ட நிர்வாகம் அவர்களையும் தனிமைப்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x