Published : 30 Apr 2020 08:15 AM
Last Updated : 30 Apr 2020 08:15 AM

கரோனா பாதிப்புள்ள சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் 14 களப்பணி குழுக்கள் அமைப்பு

சென்னை, கோவை, மதுரை, திருப்பூர், சேலத்தில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் தடுப்பு பணிக்கான 14 களப்பணி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 17 ஐஏஎஸ், 4 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 65 பேர் இடம்பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, கோவை, மதுரை, திருப்பூர், சேலம் மாநகராட்சிகளில், நோய்த்தொற்றை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் நடமாட்டத்தை குறைக்கவும், அத்தியாவசியப் பொருட்களை வழங்கவும் களப்பணிக் குழுக்களை அமைத்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதில், சென்னையில் அதிக பாதிப்புள்ள 6 மண்டலங்களுக்கு தனித்தனியாக தலாஒரு குழுவும், மீதமுள்ள 9 மண்டலங்களுக்கு 3 மண்டலத்துக்கு ஒரு குழுவும், தலைமையிடத்துக்கு ஒரு குழுவும், இதர 4 மாநகராட்சிகளுக்கு 4 குழுக்களும் என 14 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சியின் தலைமையகத்துக்கு, நிதித் துறை இணை செயலர் எம்.அரவிந்த், துணை செயலர் ஹெச்.கிருஷ்ணன் உன்னி, சென்னை காவல் தலைமையிடத்து இணை ஆணையர் ஏ.ஜி.பாபு தலைமையிலும், 4-வதுமண்டலத்துக்கு டிட்கோ செயல் இயக்குநர் கே.பி.கார்த்திகேயன், சிபிசிஐடி எஸ்பி., மல்லிகா உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் 5-வது மண்டலத்துக்கான குழுவில்டிஎன்பிஎஸ்சி செயலர் கே.நந்தகுமார், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுஎஸ்பி எஸ்.ராஜேஷ்வரி, 6-வது மண்டல குழுவில் தமிழ்நாடு சாலைபிரிவு திட்ட இயக்குநர் ஏ.அருண்தம்புராஜ், சிபிசிஐடி எஸ்பி சி.விஜயகுமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மாநகராட்சியின் 8-வது மண்டல குழு நகர ஊரமைப்பு இயக்குநர் சந்திரசேகர் சாகமுரி, 9-வது மண்டல குழு தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய இணை மேலாண் இயக்குநர் எஸ்.கோபாலசுந்தரராஜ், 10-வது மண்டல குழு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழக இணைமேலாண் இயக்குநர் எஸ்.வினீத், 1, 2 மற்றும் 3-வது மண்டல குழு சமக்ர சிக் ஷா மாநில கூடுதல் திட்ட இயக்குநர் என்.வெங்கடேஷ், 7, 11, 12-வது மண்டலத்துக்கான குழு பைபர்நெட் மேலாண் இயக்கு நர் டி.ரவிச்சந்திரன், 13, 14, 15-வது மண்டல குழு பெண்கள் மேம்பாட்டு கழக செயல் இயக்குநர் ஜெ.யு.சந்திரகலா தலைமையிலும் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, திருப்பூர் மாநகராட்சிக்கு தமிழ்நாடு குடிநீர் வாரிய இணை மேலாண் இயக்குநர் எல்.நிர்மல்ராஜ், கோவை மாநகராட்சிக்கு புவி மற்றும் சுரங்கத்துறை இயக்கு நர் இ.சரவணவேல்ராஜ், சிட்கோ மேலாண் இயக்குநர் ஆர்.கஜலட் சுமி, மதுரை மாநகராட்சிக்கு பழனிதண்டாயுதபாணி கோயில் செயல் அலுவலர் வி.ஜெயச்சந்திர பானு ரெட்டி, தொழில்துறை துணை செயலர் கே.பாலசுப்பிரமணியன்,சேலம் மாநகராட்சிக்கு சேலம், பட்டுப்புழுவளர்ப்புத் துறை இயக்குநர் வெங் கட பிரியா ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x