Published : 04 Apr 2020 07:14 AM
Last Updated : 04 Apr 2020 07:14 AM

சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைகளுக்கு அரிசி தவிர மற்ற பொருட்கள் இலவசம்: நிவாரணம் வழங்குவது குறித்து உணவுத் துறை சுற்றறிக்கை

தமிழகத்தில் சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைகளுக்கு அரிசி தவிரமற்ற அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படுவது குறித்தும், நிவாரணத் தொகை வழங்குவது குறித்தும் நியாயவிலைக்கடை ஊழியர்களுக்கு உணவுத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நிவாரணமாக அரிசி குடும்ப அட்டைகளுக்கு ரூ.1,000 மற்றும் ஏப்ரல் மாதத்துக்கான அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். அதன்படி, நாள், நேரம் குறிக்கப்பட்ட டோக்கன் வழங்கப்பட்டு, அதன் மூலம் நிவாரணம் மற்றும் பொருட்கள் வழங்கும் பணி கடந்த ஏப்.2-ம்தேதி தொடங்கியது. ஆனால்,போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள், சமூக விலகல் கடைப்பிடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவியது.

இந்நிலையில் நேற்று, ‘டோக்கன் வழங்கப்படும்போதே ரூ.1,000 வழங்கப்படும்’ என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

அந்த அறிவிப்பையடுத்து அதற்கான சுற்றிக்கையை உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுப்பியுள்ளார். அதில், அரசி குடும்ப அட்டைகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை, ஏப்ரல் மாதத்துக்கான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சர்க்கரை குடும்ப அட்டைகளுக்கு அரிசிதவிர இதர பொருட்கள் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

வீடுவீடாக டோக்கன் வழங்கப்படும் போதே ரூ.1,000 நிவாரணத்தொகை வழங்கப்பட்டு, விற்பனை முனைய இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை ஏப்.5-ம் தேதி நியாயவிலைக் கடைகள் இயங்காது என்பதால் அன்றே வீடுவீடாக சென்று அத்தியாவசிய பொருட்களுக்கான டோக்கன் மற்றும் உதவித்தொகை வழங்க வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் நிவாரணத் தொகையை நியாயவிலைக் கடைகளில் வழங்கக்கூடாது.

விற்பனை முனைய இயந்திரம் வாயிலாகவே வழங்கப்பட வேண்டும். டோக்கன் வழங்கப்படும் போதே குறிப்பிட்ட நேரத்தில் வந்து பொருட்கள் வாங்கிச் செல்ல அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x