

டெல்லியைப் போல தமிழகத்திலும் மாற்றம் ஏற்பட வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
கடந்த 8-ம் தேதி 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளைக் கைப்பற்றி அசுர பலத்துடன் அபார வெற்றி பெற்றது. பாஜக 8 தொகுதிகளைக் கைப்பற்றியது. காங்கிரஸுக்கு ஓரிடம் கூட கிடைக்கவில்லை.
அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லி முதல்வராக மூன்றாவது முறையாகப் பதவியேற்க உள்ளார். பிப்ரவரி 16-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
இந்நிலையில், நேற்று (பிப்.11) சென்னை, விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். டெல்லியில் பாஜகவை ஆம் ஆத்மி கட்சி தோற்கடித்துள்ளது. இந்த மாற்றம் இந்தியா முழுவதும் ஏற்படுமா என செய்தியாளர்கள், கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், "கண்டிப்பாக தமிழ்நாட்டிலும் அந்த மாற்றம் நடக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்" என்றார்.
தவறவிடாதீர்!