Published : 29 Dec 2019 07:44 AM
Last Updated : 29 Dec 2019 07:44 AM

சென்னையில் பவுன் விலை மீண்டும் ரூ.30 ஆயிரத்தை நெருங்குகிறது

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை, தேவை, பங்குச்சந்தை ஆகியவற்றால் உள்ளூரில் தங்கம் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுகிறது. சர்வதேச அளவில் தங்கம் விலை குறைவைக் காட்டிலும், உயர்வு அதிகமாக இருக்கிறது.

இதற்கிடையே, சென்னையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.29,840-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3,730-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.3,714-க்கு விற்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x