Last Updated : 27 Dec, 2019 12:43 PM

 

Published : 27 Dec 2019 12:43 PM
Last Updated : 27 Dec 2019 12:43 PM

உள்ளாட்சித் தேர்தல்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 மணி நிலவரப்படி 22.32% வாக்குகள் பதிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்களித்த முதியவர்

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 மணி நிலவரப்படி 22.32 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி முதற்கட்ட தேர்தல் இன்று (டிச.27) தளி, ஓசூர், காவேரிப்பட்டிணம், மத்தூர், ஊத்தங்கரை ஒன்றியங்களில் நடைபெறுகிறது. இதில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான 12 பதவிகளுக்கு 76 போ் போட்டியிடுகின்றனர். ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கான 112 பதவிகளுக்கு 531 பேர் போட்டியிடுகின்றனர்.

இதே போல் ஊராட்சி மன்ற தலைவருக்கான 170 பதவிகளுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்தவர்களில் 4 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தற்போது 166 பதவிகளுக்கு 648 பேர் போட்டியிட்டுள்ளனர்.

ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான 1,530 பதவிகளுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்தவர்களில் 415 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதில், 1,115 பதவிகளுக்கு 3,290 போட்டியிட்டுள்ளனர். 5 ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 1,824 பதவிகளுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்தவர்களில் 419 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

தற்போது, முதற்கட்ட தேர்தலில் 1,405 பதவிகளுக்கு 4,545 பேர் போட்டியிட்டுள்ளனர். இதில், 3 லட்சத்து 2 ஆயிரத்து 431 ஆண் வாக்காளர்கள்ளும், 2 லட்சத்து 93 ஆயிரத்து 269 பெண் வாக்காளர்கள், 59 திருநங்கைகள் உட்பட மொத்தம் 5 லட்சத்து 95 லட்சத்து 759 வாக்காளர்கள் உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஐந்து ஒன்றியங்களில் 9 மணி நிலவரப்படி 8.16 சதவீதம் வாக்குகள் பதிவாகியது. ஐந்து ஒன்றியங்களிலும் சேர்த்து 28 ஆயிரத்து 252 ஆண் வாக்காளர்கள், 20 ஆயிரத்து 178 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 48 ஆயிரத்து 420 பேர் வாக்களித்தனர்.

11 மணி நிலவரப்படி 22.32 சதவீதம் வாக்குகள் பதிவாகின. ஐந்து ஒன்றியங்களிலும் சேர்த்து 70 ஆயிரத்து 461 ஆண் வாக்காளர்கள்,, 62 ஆயிரத்து 27 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 488 பேர் வாக்களித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x