Published : 25 Aug 2015 03:54 PM
Last Updated : 25 Aug 2015 03:54 PM

பிறந்தநாள் வாழ்த்து கூறியோருக்கு விஜயகாந்த் நன்றி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள், நடிகர்கள் மற்றும் திரையுலகைச் சார்ந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இன்று (25.08.2015) எனது பிறந்த நாளையொட்டி என்னை நேரில் சந்தித்தும், தொலைபேசி, தொலைநகல், தொலைக்காட்சி, வாழ்த்து கடிதங்கள், மின்னஞ்சல், E-Post ஆகியவற்றின் மூலமாக எனக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது இதயமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் திரையுலகில் இருந்த காலத்தில் என்னுடைய இயக்கம் ரசிகர் மன்றங்களாக இருந்தபோது பிறந்தநாள் விழாவாகவும், தேமுதிக அரசியல் இயக்கமாக மலர்ந்தபோது வறுமை ஒழிப்பு தினமாகவும் என்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளையும் பொது மக்களுக்கு பயன் அளிக்கக் கூடிய வகையில் செயல்படுத்தி வருகிறேன்.

வறுமை ஒழிப்பு தினத்தை தமிழகமெங்கும் செயல்படுத்தி பல லட்சக்கணக்கான மக்களுக்கு நலஉதவிகள் பலவற்றை செய்த தேமுதிகவை சேர்ந்த நிர்வாகிகளுக்கும், கழகத் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், எனக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பொதுச்செயலளர் முரளிதரராவ், திலீப்ஜி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தேசிய செயலாளர் சு.திருநாவுக்கரசர், ஜெ.எம்.ஆரூண், கராத்தே தியாகராஜன் , மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன், புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பொதுச்செயலாளர் ரவிக்குமார் ஆகியோருக்கு என் நன்றிகள்.

புதியநீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், கொங்குநாடு மக்கள் தேசியகட்சி பொதுச்செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி செயல்தலைவர் ரவிபச்சமுத்து, தென் இந்திய திருச்சபை பேராயர் எஸ்றா.சற்குணம், ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் ஆலோசகர் பொன்ராஜ், கோகுலம் மக்கள் கட்சித்தலைவர் சேகர், பாரதிய ஜனதா கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் மோகன்ராஜுலு, மாநில செயலாளர் வானதி ஸ்ரீநிவாசன், எஸ்.வி.சேகர், மேல்மருவத்தூர் செந்தில்குமார் பங்காருஅடிகளார் ஆகியோருக்கும் என் நன்றிகள்.

திரையுலகை சேர்ந்த நடிகர்கள் சத்யராஜ், பிரபு, விஜய், சிம்பு, ஆர்யா, விமல், கருணாஸ், மன்சூர் அலிகான், விதார்த், விஜய்வசந்த், நரேன், சண்முகசுந்தரம், டெல்லிகணேஷ், பாண்டு, எம்.எஸ்.பாஸ்கர், ஜான்விஜய், தம்பிராமையா, பவர்ஸ்டார் ஸ்ரீநிவாசன், கும்கி அஸ்வின், நடிகைகள் தேவதர்ஷினி, சானியாதாரா, இயக்குநர்கள் விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, மனோஜ்குமார், செந்தில்நாதன், ராஜேஷ், ராஜபாண்டி, தயாரிப்பாளர்கள் ரமேஷ், முருகன், அருள்பதி, ராமவாசு, சௌந்தர், எடிட்டர் ஜெயசந்திரன், இசையமைப்பாளர் தமன், சத்யா ஆகியோருக்கும் என் நன்றிகள்.

தேமுதிகவின் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், கழக அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் என அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றி'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x