Published : 20 Nov 2019 08:46 AM
Last Updated : 20 Nov 2019 08:46 AM

ஸ்ரீபெரும்புதூர் அருகே விரைவில் மேம்பாலம், சுரங்கப் பாதை அமைக்கப்படும்: டி.ஆர்.பாலுவுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடிதம்

ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம், பெரும்புதூர் - ஓரகடம் சாலைகள் சந்திப்பில் மேம்பாலமும் சந்தைவேலூர் பகுதியில் சுரங்க நடைபாதையும் அமைக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஸ்ரீபெரும்புதூர் அருகில் ஒரு தளப்பிரிவு மேம்பாலமும் இரண்டு சுரங்க நடைபாதைகளும் அமைத்து தருமாறு கடந்த ஜூலை 16-ம் தேதி நிதின் கட்கரிக்கு திமுக முதன்மைச் செயலாளரும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான டி.ஆர்.பாலு கடிதம் எழுதியிருந்தார்.

இதைத்தொடர்ந்து நிதின் கட்கரி அனுப்பிய பதில் கடிதத்தில், "ஸ்ரீபெரும்புதூர் - கவரப்பேட்டை பகுதியில் நடைபெற்று வரும் 6 வழிச்சாலை பணிகளின் ஒரு பகுதியாக ஸ்ரீபெரும்புதூர்- தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் - ஓரகடம் சாலைகள் சந்திப்பில் தளப்பிரிவு மேம்பாலம் அமையவுள்ளது. சந்தைவேலூர் பகுதியில் சுரங்கநடைபாதையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் - மதுரவாயல் பகுதி நெடுஞ்சாலையை வலுப்படுத்தும் பணிகள் நிறைவேற்றப்படும்போது தண்டலம் கிராம குறுக்குச்சாலை பணிகளும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்" என்றும் நிதின் கட்கரி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக டி.ஆர்.பாலு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x