Published : 24 Oct 2019 01:38 PM
Last Updated : 24 Oct 2019 01:38 PM

அதிமுக மீதான மக்களின் நம்பிக்கை நிரூபிக்கப்பட்டது: துணை முதல்வர் ஓபிஎஸ் பேட்டி

மதுரை

அதிமுக மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையால் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது என துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அதிமுக மீது மக்களுக்கு நம்பிக்கை இருப்பதையே இந்த வெற்றி எடுத்துக் காட்டுகிறது.

அதிமுகவுக்கு மட்டுமே தமிழகத்தை ஆளும் உரிமை இருக்கிறது என மக்கள் எப்போதும் நினைக்கின்றனர் என்பதற்கு இது ஒரு சான்று.
உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை வரும் டிசம்பர் 30-க்குள் நிச்சயமாக நடத்தி முடிக்கப்படும்.

மகாராஷ்டிரா, ஹரியாணா மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளதும் மத்தியில் ஆளும் பாஜக மீதான நம்பிக்கையின் வெளிப்பாடே" என்றார்.

முன்னதாக, இன்று (அக்.24) காலை துணை முதல்வர் ஓபிஎஸ் மதுரையில் உள்ள மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், அக்.30-ல் கொண்டாடப்படும் தேவர் குரு பூஜையை முன்னிட்டு மதுரை அண்ணாநகர் வங்கியில் உள்ள தேவர் சிலைக்கான தங்கக் கவசத்தை கையெழுத்துபோட்டு பெற்று நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்.

விக்கிரவாண்டியில் வெற்றிமுகம்..

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 1,13,428 வாக்குகள் பெற்று வெற்றிமுகம் கண்டுள்ளார்.

நாங்குநேரியில் 11 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையில், அதிமுக. : 52,613; காங்கிரஸ்: 35,420; நாம்தமிழர்: 1,825 வாக்குகள் பெற்றுள்ளன. அதிமுக வேட்பாளர் வெ.நாராயணன் 17,193 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x