Published : 20 Oct 2019 08:17 AM
Last Updated : 20 Oct 2019 08:17 AM

மகாத்மா காந்தி, படேல் கண்ட கனவு நனவாகவில்லை; எளிமையாக வாழ்ந்தால் ஊழலை ஒழிக்கலாம்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கருத்து

சென்னை

எளிமையாக வாழ்ந்தால் ஊழலை முற்றிலுமாக ஒழித்து விடலாம் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.

சேவா பாரதி தமிழ்நாடு அமைப் பின் 20-ம் ஆண்டு விழா சென்னை சேத்துப்பட்டில் நேற்று நடைபெற் றது. இதில் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் பேசியதாவது:

கல்வி, சுகாதாரம், தன்னம் பிக்கை, சமூகநலன், பேரிடர் மேலாண்மை மற்றும் மறுவாழ்வு ஆகிய 5 வழிகளில் சேவா பாரதி அமைப்பு சேவை செய்து வரு கிறது. தமிழகத்தில் 2004-ம் ஆண்டு சுனாமி வந்தபோதும், 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தில் சென்னை சிக்கியபோதும், 2018-ம் ஆண்டு கேரளாவை புயல் தாக்கியபோதும், அதேபோல் கஜா புயலில் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டபோதும் சேவா பாரதியின் பணி மகத்தானது.

இதுபோன்ற அமைப்புகள், அறக்கட்டளைகள், தொண்டு நிறுவ னங்களின் தன்னலமற்ற சேவை கள், அரசு தனது நோக்கங்களை நிறைவேற்ற பெருமளவு உதவு கின்றன. நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் சுதந்திரப் போராட்ட வீரர்கள், மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல் ஆகியோர் கண்ட கனவு நனவாகவில்லை. ஏழைகளும், வறுமையும் இல்லாத நாடாக உருவாக வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். ஆடம்பர வாழ்க்கையே ஊழலுக்கு அடிப்படைக் காரணம். எளிமை யான வாழ்க்கையை வாழ விரும் பினால் ஊழல் முற்றிலுமாக ஒழிந்துவிடும். எளிமையான வாழ்க்கை வாழ்ந்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் இரண்டே ஆண்டுகளில் மாற்றம் ஏற்படும்.

இவ்வாறு ஆளுநர் பேசினார்.

சின்மயா மிஷன் ஆச்சார்யா பூஜனீய சுவாமி மித்ரானந்தா பேசும் போது, “சேவையும், மனிதநேய முமே மனிதனைப் புனிதப்படுத்து கிறது. சேவை செய்யும்போது மேலும் சேவை செய்ய வேண்டும் என்று ஊக்கத்தை கடவுள் பரிசாக வழங்குவார். கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 5 வழிகளில் சேவை செய்து வரும் சேவா பாரதி அமைப்பு, திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதன்மூலம் தனிநபர் வருமானம் அதிகரிப்பதுடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அது வழிவகுக்கும்’’ என்றார்.

முன்னதாக தொழுநோய் ஒழிப்பில் சிறப்பாகப் பணியாற்றி வரும் ஆர்.சிவா, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக ‘கொங்கு அறிவாலயம்’ என்ற பெயரில் பள்ளிக்கூடம் நடத்திவரும் ஆர்.ராஜேந்திரன் ஆகியோருக்கு சேவா விருதை ஆளுநர் வழங்கினார்.

நிகழ்ச்சியில், சேவா பாரதி தமிழக தலைவர் ரபுமனோகர் வரவேற்புரையாற்றினார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென்பாரத சேவை தலைவர் கி.பத்மகுமார், சேவா பாரதி அமைப்பின் சேவைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜெயச்சந்திரன், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், தமிழ்நாடு சேவா பாரதி அமைப்பின் செயலாளர் ஜெ.சி.இந்துமதி உள் ளிட்டோர் கலந்துகொண்டனர். நிறைவில் துணைத் தலைவர் நாராயணன் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x