Published : 15 Oct 2019 10:47 AM
Last Updated : 15 Oct 2019 10:47 AM

மனைவி, குழந்தைகளுடன் பைக்கில் பயணம் ஹெல்மெட் அணிந்து சென்றவரிடம் வாக்குவாதம் செய்து அபராதம் விதித்த போலீஸார்: சிதம்பரத்தில் வைரலாக பரவும் வாட்ஸ் - அப் வீடியோ

கடலூர்

சிதம்பரம் கஞ்சித்தொட்டி பகுதி யில் நேற்று முன்தினம் மாலை போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புவன கிரி பகுதியில் இருந்து பைக்கில் ஹெல்மெட் அணித்து மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்த ஒரு வரை போலீஸார் நிறுத்தியுள்ளனர்.

பைக்கில் வந்தவர், "நான் ஹெல்மெட் அணிந்துள்ளேன்; என்னை எதற்காக நிறுத்தியுள் ளீர்கள்!'' என்று கேட்டுள்ளார். அதற்கு போலீஸார், " பைக்கில் 2 பேர் தான் செல்ல வேண்டும், நீங்கள் குழந்தைகளையும் அழைந்து வந்துள்ளீர்கள்'' என்று கூற, பைக்கில் வந்தவரும், அவரது மனைவியும் மன்னிப்பு (சாரி) கேட்டுள்ளனர். ஆனால், போலீஸார் அவர்களிடம் தொடர்ந்து, போக்குவரத்து விதிகளைக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அபராதம் விதித்துள்ளனர். இது, வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, சிதம்பரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் வாட்ஸ்அப், பேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது. போலீஸாரின் இந்தச் செயலுக்கு அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். போலீ ஸார் இருசக்கர வாகனத்தில் வரும் ஆண்கள் மற்றும் பெண்க ளிடம் கண்ட இடங்களில் நின்று கொண்டு அபராதம் விதிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர் என்று நகர வாசிகள் தங்கள் ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x