Last Updated : 03 Jul, 2015 08:48 AM

 

Published : 03 Jul 2015 08:48 AM
Last Updated : 03 Jul 2015 08:48 AM

கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் கல்விக் கடன் பெறுவது எப்படி?

அண்ணா பல்கலைக்கழக வளா கத்தில் பொறியியல் பொது கலந்தாய்வுக்கு வரும் மாண வர்களுக்கு கல்விக் கடன் உடனுக்குடன் பெற வழி காட்ட பல்வேறு வங்கிகள் பல்கலைக்கழக வளாகத்தில் அரங்கங்களை அமைத்துள்ளன. அங்கு நேரடியாக கல்விக் கடன் பெறுவதற்கான ஒப்புதலை சில வங்கிகள் வழங்குகின்றன. சில வங்கிகள் தங்களது கிளைகளின் மூலம் ஒப்புதல் பெற அறிவுறுத்துகின்றன.

அண்ணா பல்கலைக்கழகத்தில் கலந்தாய்வுக்கு பின், வழங்கப்படும் ஒதுக்கீட்டு ஆணையை பல் கலைக்கழக வளாகத்தில் அமைக் கப்பட்டுள்ள வங்கி அரங்கில் கொடுக்க வேண்டும். அதைப் பார்த்த பிறகு அரங்கில் உள்ள வங்கி பணியாளர்கள் கடனுக்கான ஒப்புதல் கடிதத்தை தருவார்கள். சில வங்கிகள் ஒதுக்கீட்டு ஆணை இல்லாமலேயே ஒப்புதல் கடிதம் வழங்குகின்றன.

அந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள வங்கிக் கிளையை அணுக வேண்டும்.

கல்விக் கடன் பெறுவதற்கு வங்கி கிளையில் அளிக்க வேண்டிய சான்றிதழ்கள்

* அண்ணாப் பல்கலைக்கழகத்தில் கொடுக்கப்படும் ஒதுக்கீட்டு ஆணை.

* அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வங்கி அரங் கில் கொடுக்கப்படும் கடிதம்.

* பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.

* வருமான சான்றிதழ்.

* ஆதார் அட்டை அல்லது பான் அட்டை.

* கல்லூரியிலிருந்து பெறப் படும் சேர்க்கை சான்றிதழ்.

* கல்லூரியிலிருந்து வழங் கப்படும் கட்டண விவரம்.

* அடையாளச் சான்று,

* இருப்பிடச் சான்று.

இந்த ஆவணங்களை பரிசீலித்த பிறகு கல்விக் கடன் வழங்கப்படும். படிப்பு காலம் முடிந்து ஒரு வருடம் அல்லது வேலை கிடைத்த பிறகு 6 மாதங்கள்-எது குறுகிய காலமோ அந்த காலத்திலிருந்து கடனை திருப்பச் செலுத்த வேண்டும். படிக் கும் காலத்தில் கடனில் எந்த பகுதி யையும் திரும்பச் செலுத்த வேண் டிய அவசியமில்லை. ஆனால் கடனுக்கான வட்டியை படிக்கும் காலத்திலேயே தவறாமல் கட்டி வருபவர்களுக்கு வட்டி விகிதத்தில் சலுகை தரப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அரங்குகள் அமைத்துள்ள வங்கி களில், 4 லட்சத்துக்கு உட் பட்டு இருக்கும் கல்விக் கடனுக்கு கோரப்படும் வட்டி விகிதமும், வட்டியை படிக்கும் காலத்திலேயே கட்டுபவர்களுக்கு தரப்படும் சலுகை விகிதமும் அட்டவணையில் தரப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x