Published : 11 Sep 2019 10:43 AM
Last Updated : 11 Sep 2019 10:43 AM

கல்வித் துறையில் எதிர்க்கட்சி தலையீடு அதிகரிக்கும் என்பதால் பள்ளி மேலாண் குழுவை அமைக்க தயக்கம்? 

ந.முருகவேல்

விருத்தாசலம்

இந்தியாவில் அனைத்து மாநிலங் களிலும் உள்ள பள்ளிகளில், பள்ளியின் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காக கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ல் ஏற்படுத்தப்பட்ட ஒரு குழுதான் 'பள்ளி மேலாண்மைக் குழு'. பள்ளிகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்துதல், அனைத்து பள்ளி வயது குழந்தைகளையும் (6 முதல் 14 வயது) பள்ளிகளில் சேர்ப்பது, பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல், கல்வித் தரம் மேம்பாடு மற்றும் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டம் அமலாக்கத்தை கண்காணித்தல் ஆகியவை இக்குழுவின் நோக்கங்களாகும்.

இக்குழு மாநிலம், மாவட்டம், பள்ளி என்ற 3 நிலைகளில் அமைக் கப்பட வேண்டும். இக்குழு தற் போது 'சமக்ர சிக்க்ஷா' திட்டத் தின் கீழ் மாற்றியமைக்கப்பட் டுள்ளது. மேலும் புதியக் கல் விக் கொள்கையின் படி தற் போது உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளிலும் இக் குழுவை உருவாக்கப் பரிந்துரைக் கப்பட்டுள்ளது.

பள்ளி அளவில் இக்குழுவின் தலைவராக பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவரின் தாய் அல்லது தந்தை இருப்பர். மாநில அளவில் 'சமக்ர சிக்க்ஷா' திட்டத் தலைவரைக் கொண்டு 26 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் இத்திட்டத்தின் கூடுதல் திட்ட இயக்குநர்கள் 2 பேர், பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர், கல்வியாளர்கள், கட்டிடப் பொறியியல் ஆலோசகர் கள் என 26 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர்.

அதேநேரத்தில் மாவட்ட அளவிலான குழுவில் அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் தலைமையில், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்டப் பஞ்சாயத்து தலைவர், மாநகராட்சி, நகராட்சி ஆணையர் கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், அரசு சாரா தொண்டு நிறுவன உறுப்பினர்கள் இருவர் என இக்குழு அமைக்கப்படவேண்டும்.

ஆனால் இந்தக் குழு இதுவரை அமைக்கப்படவில்லை என அரசுப் பள்ளிகளின் பாதுகாப்பு மேடை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் க.திருப்பதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது, "மாவட்ட அளவி லான பள்ளி மேலாண்மைக் குழுவை அமைக்க இந்த அர சுக்கு சில சங்கடங்கள் உள்ளன. மாவட்ட அளவிலான குழு மக் களவை உறுப்பினரை தலைவ ராகக் கொண்டுதான் செயல்பட வேண்டும். அவ்வாறு நியமிக்கப் பட்டால், தேனி தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் திமுக, காங் கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி உறுப் பினர்களைக் கொண்டுதான் அமைக்க வேண்டியிருக்கும். அப்படி குழு அமைத்தால் பள்ளி கல்வித் துறையில் எதிர்க்கட்சி களின் தலையீடுகள் அதிகரிக்கும் என்பதால் குழுவை அமைக்க அரசு தயக்கம் காட்டுகிறது'' என்று கூறினார். இதுதொடர்பாக கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆறுமுகத்திடம் கேட்டபோது, இதுவரை குழு அமைக்கப்படவில்லை. ஓரிரு வாரங்களில் குழு அமைக்கப்படும் என்றார். மேலும் விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைக்க பெற்ற தகவல்படி, மாவட்ட அளவிலான பள்ளி மேலாண்மைக் குழு அமைப்பது தொடர்பாக ஆலோசித்து வருவ தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினர் கவுதமசிகாமணியிடம் இதுபற்றி கேட்டபோது, "இது தொடர்பாக மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு குழு அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x