Published : 10 Sep 2019 07:51 AM
Last Updated : 10 Sep 2019 07:51 AM

பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை வாக்காளர் பட்டியலில் சரிபார்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு உத்தரவு

சென்னை

தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களை வாக்காளர் பட்டியலில் சரிபார்த்துக் கொள்ளும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு உத்தரவிட்டுள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத் தின் உத்தரவுப்படி, ஆண்டு தோறும் வாக்காளர் பட்டியல் திருத் தப்பணிகள் செப்டம்பர் மாதத்தில் நடக்கும். முன்னதாக, செப்டம்பர் 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். ஆனால், இந்த முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளில் மாற் றம் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் கள் தாங்களே விவரங்களை சரிபார்த்து ஆன்லைனில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில், ‘வாக் காளர் சரிபார்த்தல் திட்டம்’ ஏற் படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல்- ‘என்விஎஸ்பி’, கைபேசி செயலி, 1950 என்ற தொலைபேசி எண், பொது சேவை மையங்கள், வாக்காளர் உதவி மையங்கள் ஆகியவற்றின் மூலம், வாக்காளர்கள் தாங்களே பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இத்திட்டம், கடந்த செப்.1-ம் தேதி தொடங் கப்பட்ட நிலையில், செப்.30-ம் தேதி வரை நடக்கிறது. இக்கால கட்டத்தில் வழங்கப்படும் திருத் தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதன் பின் அக்டோபர் 15-ம் தேதியே வரைவு வாக்காளர் பட்டியல் வெளி யிடப்படுகிறது.

அந்த வரைவு வாக்காளர் பட்டி யலில், திருத்தங்கள் இருப்பின், நவம்பர் 2,3, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடிகளில் நடக்கும் சிறப்பு முகாம்களில், நேரடியாக வாக்காளர்கள் சென்று மனுக்களை அளிக்கலாம். அல்லது ஆன்லைன் மூலமும் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வழக்கமாக வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடங்கியதும் பொதுமக்கள் திருத்தம், முகவரி மாற்றம் இவற்றுக்கு ஆர்வம் காட்டுவது வழக்கம்.

ஆனால், இம்முறை வாக்காளர் சரிபார்த்தல் திட்டம் தொடங்கப்பட்டு 9 நாட்கள் கழிந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 5 கோடியே 92 லட்சம் வாக்காளர்களில் இது வரை 13 ஆயிரம் பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொண்டுள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது. இதையடுத்து, வாக்காளர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

குறுஞ்செய்தி

இதுகுறித்து நேற்று அவர் கூறியதாவது: பெயர், முகவரி, புகைப்படம் திருத்தம் மேற்கொள்ள அவசியமுள்ள வாக்காளர்கள் மட்டுமின்றி அனைத்து வாக்காளர் களும் என்விஎஸ்பி மற்றும் கைபேசி செயலியில் ‘verify’ என்ற பகுதிக்குச் சென்று, தங்கள் விவரங் களை சரிபார்த்து, கைபேசி எண் ணையும் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது, தவறுகள் இருந்தால் கண்டறிந்து அவற்றை திருத்தலாம். இது தவிர, அடுத்தடுத்த சேவைகள், விவரங்கள் குறித்த தகவல்கள் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி யாக அளிக்கப்படும். வேறு யாரே னும் வாக்காளர்கள் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்க மனு அளிக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட வாக்காளருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் துண்டு பிரசுரம் விநியோகித்தல், போஸ்டர்கள் ஒட்டுதல், பேரணி போன்றவற்றின் மூலம் வாக்காளர்கள் மத்தியில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத் தும்படி, மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்காளர் களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படம் தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x