Published : 30 Aug 2019 10:02 AM
Last Updated : 30 Aug 2019 10:02 AM

புதுச்சேரி சட்டப்பேரவையில் ரங்கசாமியை விமர்சித்ததால் மோதல்: பெண் எம்எல்ஏக்களுக்குள் வாக்குவாதம்

புதுச்சேரி 

புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமியை விமர்சித்ததால் காங் கிரஸ் எம்எல்ஏக்களுடன் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடுமையாக வாதிட்டனர். ஒரு கட்டத்தில் பெண் எம்எல்ஏக் களுக் குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று நடந்த விவாதம்:

அமைச்சர் கந்தசாமி: அரி சியை ரேஷனில் விநியோகிக்க கோப்பு அனுப்பி 15 நாட்களாக காத்திருக்கிறோம். அனைத்து கோப்புகளையும் ஆளுநருக்கு அதிகாரிகள் அனுப்புகிறார்கள். நீதிமன்றம் உத்தரவிட்டும் செயல் பட விடாமல் தடுக்கிறார்கள். ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவுப் படி நியமன எம்எல்ஏக்கள் பேரவைக்குள் வந்துள்ளீர்கள்.

சங்கர் (பாஜக நியமன எம்எல்ஏ): நியமன எம்எல்ஏக்களை பேரவையில் அனுமதிக்க உச்சநீதி மன்றம் சொல்லும் முன்பு உயர்நீதி மன்றம் சொன்னதை உடனே செய் தீர்களா? உள்ளே விடவில்லை. வழக்கில் தீர்ப்பை முழுதாக பெறுவது அவசியம்.

சாமிநாதன் (பாஜக நியமனம்): போராடிதான் நாங்கள் பேரவைக்குள் வந்தோம்.

அமைச்சர் கந்தசாமி: மக் கள் பிரதிநிதிகள் அதிகாரம் தொடர்பான நீதிமன்ற உத்தரவை சட்டமாக இயற்ற வேண்டும்.

சங்கர்:வழக்கு நிலுவையில் தான் இருக்கிறது.

கோபிகா (என்,ஆர்.காங்): ஆட்சியில் எதுவுமே இல்லை. அரிசி போடவில்லை, ஊதியம் தரவில்லை. ஆளுநரையும் மத்திய அரசையும் மட்டும் குறை கூறியே ஆட்சி நடத்துகிறார்கள்.

எம்எல்ஏ கோபிகா இப்படி கூறியதும், அமைச்சர் கந்தசாமி எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமியை குற்றம் சாட்டினார். அதற்கு என்.ஆர்.காங்கி ரஸார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் என்.ஆர்.காங்கிரஸார், காங்கிரஸார் இடையே கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

உடனே குறுக்கிட்ட அமைச்சர் நமச்சிவாயம், ''அரசியல் பேச வேண்டாம். ஆளுநர் உரை மீது பேசுங்கள்'' என்று கூறினார்.

அப்போது எம்எல்ஏ கோபிகா, "பேச வாய்ப்பு தாருங்கள். பெண்களை மதியுங்கள். நியமன எம்எல்ஏக்கள் கொல்லைப்புறமாக வந்ததாக கூறுகிறீர்கள்- அதே நேரத்தில் முதல்வர் எப்படி வந்தார்" என்று கேள்வி எழுப்ப, அவை யில் மீண்டும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது, நியமன எம்எல்ஏ சாமிநாதன் குறிப்பிட்ட வார்த்தைக்கு அனந்தராமன் பதில் அளித்து, அவதூறு வழக்கு தொடர் வேன் என்று எச்சரித்தார். தொடர் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் சபா நாயகர் எழுந்து நின்று அனை வரையும் அமருமாறு கூறினார்.

ஒரு கட்டத்தில் அரசு கொற டாவும், பாஜக எம்எல்ஏக்களும் கடுமையாக வாதிட்டு, அவர்கள் பேசியது அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.

"பேரவையில் சமமான உரிமை தரப்படுகிறது. எதிர்க்கட்சி பெண் எம்எல்ஏ போல் தேவையில்லாததை பேசவில்லை'' என்று அப்போது திமுக எம்எல்ஏ கீதா தெரிவிக்க, என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ சந்திர பிரியங்காவும் அதற்கு பதில் கூற, மற்றொரு காங்கிரஸ் பெண் எம்எல்ஏ விஜயவேணியும் பேசத் தொடங்கினார். இதனால் பெண் எம்எல்ஏக்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, என்.ஆர்.காங் எம்எல்ஏ கோபிகா , "பெண்ணாக இருந்து உங்களிடம் போராடும் ஆளுநருக்கு நன்றி" என்று கூற, தொடர்ந்து அவையில் என்.ஆர்.காங்கிரஸ் - காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பேசியதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

அதன் பின்னர் பேசிய முதல்வர் நாராயணசாமி, "கடந்த என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில், மாநில திட்டக்குழு கூட்டத்துக்கு அப்போது எம்பியாக இருந்த என்னை அழைக்கவில்லை. கோயில் அறங்காவலர் நியமனத்தை கூட அளிக்க மறுத்தனர்" என்றார்.

அப்போது அமைச்சர் நமச்சி வாயம், "கடந்த ஐந்து ஆண்டு என்ன ஆட்சி நடந்தது என்று பாருங் கள். நாங்கள் அனுபவித்தோம். அதையே இப்போது எதிர்க்கட்சி யான என்.ஆர்.காங்கிரஸார் அனுபவிக்கிறீர்கள்" என்றார்.

அதற்கு அதிமுக சட்டமன்றத் தலைவர் அன்பழகன், "ஆளும் காங்கிரஸும் தற்போது ரங்கசாமி வழியில் செயல்படுகிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x