Published : 26 Aug 2019 07:17 AM
Last Updated : 26 Aug 2019 07:17 AM

புதிய விதிகள் உருவாக்கப்படாததால் பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட பலனை பெறுவதில் சிக்கல்: ஆண்டுதோறும் 10 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிப்பு 

மு.யுவராஜ் 

சென்னை 

முதலமைச்சரின் பெண் குழந்தை கள் பாதுகாப்பு திட்டப் பயன் களை பெற புதிய விதிகள் உரு வாக்கப்படாததால் திட்ட பய னாக முதிர்வு தொகை பெறுவ தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 10 ஆயிரம் விண் ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு வருகின்றன.

முதலமைச்சரின் பெண் குழந் தைகள் பாதுகாப்பு திட்டம் கடந்த 1992-ம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி, குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50 ஆயிரமும் (1.08.2011 -க்கு முன்பு பிறந்திருந் தால் ரூ.25 ஆயிரம்) இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25 ஆயிரமும் ஆரம்ப முதலீட்டு தொகையாக சமூகநலத் துறை யின் சார்பில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் செலுத் தப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற அக் குடும்பம் ஆண் குழந்தையை தத்தெடுக்கக் கூடாது. பெற்றோரில் ஒருவர் 35 வயதுக்குள் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொண் டிருக்க வேண்டும். அவர்கள் தமி ழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து வசிப்பவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். இப்பயனை அடைய பெண் குழந்தை 10-ம் வகுப்பு வரை படித்து பொதுத்தேர்வு எழுதி யிருத்தல் வேண்டும் என்பன போன்ற விதிமுறைகள் உள்ளன. ஆரம்ப கால முதலீடு 5 ஆண்டு களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப் பட்டு பெண் குழந்தையின் 18 வயதுக்கு பிறகு வட்டியுடன் கூடிய முதிர்வு தொகை வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஆண்டுதோறும் சுமார் 45 ஆயி ரம் விண்ணப்பங்கள் சமூகநலத் துறையிடம் தாக்கல் செய்யப் படுகின்றன. ஆனால், விதிகளைக் காரணம் காட்டி அதிகபட்சமாக 10 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. எனவே, பெற்றோரின் கோரிக்கையை ஏற்று விதிகளை தளர்த்த அரசுக்கு பரிந்துரைக்க சமூகநலத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, சமூகநலத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “கிராமங்களில் படிக்கும் பெண் குழந்தைகளின் குடும்பச் சூழல், போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு காரணங் களால் 10-ம் வகுப்பு வரை படித்து பொதுத்தேர்வு எழுதுவதில்லை. பலருக்கு 30 வயதை தாண்டித்தான் திருமணம் நடக்கிறது. எனவே, 35 வயதுக்குள் குடும்பக் கட்டுப்பாடு செய்வது சாத்தியம் இல்லை. படிப்பு, வேலைக்காக வெளிமாநிலம், வெளிநாடுகளுக் குச் செல்வது தவிர்க்க முடியாத தாக உள்ளது. இதுபோன்ற சூழலில், விண்ணப்பிக்கும்போது பெற்றோர் 10 ஆண்டுகள் தமி ழகத்தில் இருக்க வேண்டும் என்ற விதியால் பலருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது.

இதுபோன்ற விதிகளை தளர்த்த பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர். இந்த விதிகள் அனைத்தும் 25 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய காலக்கட்டத் துக்கு ஏற்ப இயற்றப்பட்டது. எனவே, தற்போதைய காலத்துக்கு ஏற்றவகையில் விதிகளை தளர்த்த தமிழக அரசுக்கு பரிந்துரைக்க திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x