Published : 23 Aug 2019 11:32 AM
Last Updated : 23 Aug 2019 11:32 AM

பள்ளிகள், அரசு, தனியார் அலுவலகங்கள் திறப்பு; காஷ்மீரில் இயல்புநிலை திரும்புகிறது

ஸ்ரீநகர்

ஸ்ரீநகர் உட்பட காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் கட்டுப்பாடு கள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக இயல்புநிலை திரும்பி வருகிறது.

காஷ்மீருக்கு கடந்த 70 ஆண்டு களுக்கும் மேலாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 5-ம் தேதி ரத்து செய் தது. மேலும், காஷ்மீர் மாநி லத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங் களாகவும் பிரித்தது.

மத்திய அரசின் இந்த நடவடிக் கைக்கு காஷ்மீர் பிரிவினைவாத அமைப்புகளும், மக்களின் ஒரு பகுதியினரும் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர். இதனிடையே, அசம்பா விதங்களை தவிர்ப்பதற்காகவும், சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதற் காகவும் காஷ்மீரில் 144 தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. மேலும், வதந்திகள் பரவுவதை தடுப்பதற்காக இணையதள சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், காஷ்மீரில் அமைதியான சூழல் தொடர்வதன் காரணமாக, கடந்த வாரம் முதல் அங்கு கட்டுப்பாடுகள் படிப் படியாக தளர்த்தப்பட்டு வரு கின்றன. அதன்படி, நேற்று நகர் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகளில் கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டன.

இதனால், இதுவரை வெறிச் சோடி கிடந்த பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் காணப் பட்டது. எனினும், பெரும்பாலான இடங்களில் பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மிகக் குறைவாகவே இயங்கின. அரசு அலுவலகங்கள், தனியார் நிறு வனங்கள் வழக்கம் போல இயங்கி வருகின்றன. அதேசமயத்தில், சந் தைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. ஆங்காங்கே சில கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன.

பள்ளிகள் திறக்கப் பட்டபோதிலும் மாணவர்களின் வருகை மிகவும் குறைவாகவே காணப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x