Published : 19 Aug 2019 08:31 AM
Last Updated : 19 Aug 2019 08:31 AM

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்படும்: ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி நம்பிக்கை

சென்னை

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மீட்கப்படும் என்று ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி தியாக ராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.

'தீர்வு' (தேசிய வளர்ச்சி இயக் கம்) அமைப்பு சார்பில் சமீபத்தில் ‘நீக்கப்பட்ட காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ பற்றிய தெளிவான பார்வை' என்ற பெயரில் கருத்தரங்கம் சென்னை யில் நேற்று நடைபெற்றது. இதில் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் த.நா.வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சட்டப்பிரிவு நீக்கப்பட்டது உள் ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி தியாகரா ஜன் மற்றும் தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

கருத்தரங்கில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி தியாகராஜன் பேசும் போது, “ஜம்மு காஷ்மீர் பகுதியில் வசிக்கும் மக்கள் இந்தியாவுடன் இணையவே விரும்புகின்றனர். அங் குள்ள தீவிரவாதிகளை, அப்பகுதி மக் களே எதிர்க்கின்றனர் சிறப்பு அந்தஸ்து நீக்கிய பின்னரும் அமைதி நிலவுகிறது.

இந்திய ராணுவத்தின் மூலம்தான் கல்வி பணி ஆற்றப்பட்டு வருகிறது. பாகிஸ்தானைப் புறக்கணிக்கும் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு ஆத ரவு பெருகி வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியை இந்திய ராணுவம் சரியான நேரத்தில் திட்டமிட்டு மீட்கும்” என்றார்.

நாராயணன் திருப்பதி பேசும் போது, “காஷ்மீருக்கு சிறப்பு அந் தஸ்து அளித்தபோதே எதிர்ப்பு வந் தது. இந்நிலையில், தற்போதைய மத்திய அரசு அந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை நாட்டு மக்கள் வரவேற்கின் றனர். அங்கு பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தவும், அங்குள்ள மக்களின் முன்னேற்றத்துக்காகவும் இனி மத்திய அரசு வழிவகுக்கும்.

இந்த முடிவு, மத்திய அரசு அவசரத் தில் எடுக்கவில்லை.பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக் கும். நாடுமுழுவதும் சட்ட ஒழுங்கை சீரமைப்பதிலும் பயங்கரவாதங்கள் மீதான நடவடிக்கை எடுப்பதிலும் அரசு தீவிரமாக உள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x