Published : 18 Jul 2019 08:07 AM
Last Updated : 18 Jul 2019 08:07 AM

டெல்லி - லக்னோ ரயில் ரூ.60 கோடிக்கு விற்பனை; மதுரை - சென்னை தேஜஸ் ரயிலும் தனியார்மயமாகும் அபாயம்:  எஸ்ஆர்எம்யூ பொதுச் செயலர் எச்சரிக்கை

மதுரை

டெல்லி - லக்னோ தேஜஸ் விரைவு ரயில் தனியார் நிறுவனத்துக்கு ரூ. 60 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இதேபோன்று மதுரை- சென்னை உட்பட மற்ற தேஜஸ் ரயில்களும் தனியார்மயமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என எஸ்ஆர்எம்யூ பொதுச்செயலர் என். கண்ணையா அச்சம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஒவ்வொரு ரயில்வே மண்டலத்திலும் லாபகரமாக இயங் கும் பயணிகள் விரைவு ரயில்களை தனியார்மயமாக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி டெல்லி - லக்னோ தேஜஸ் விரைவு ரயில் ரூ. 60 கோடிக்கு விற்கப்பட் டுள்ளது. இந்த ரயிலில் பயணிக்க இரண்டு மடங்கு கட்டணம் செலுத்த நேரிடும்.

இந்த ரயிலை வாங்கிய தனியார் நிறுவனம், ரயில்வேயின் ஐஆர்எம்சி நிதி நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ. 6 கோடி என்ற கணக்கில் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ. 60 கோடி செலுத்தி தேஜஸ் ரயில் பெட்டிகளை முழுமையாக வாங்கிவிடும். இந்த வண்டி மூலம் கிடைக்கும் பயணிகளின் டிக்கெட், பார்சல், லக்கேஜ் வருவாய், ரயில் பெட்டிகளில் செய்யப்படும் விளம் பர வருவாயையும் தனியார் நிறு வனமே வசூலித்துக்கொள்ளும்.

தற்போது பயண டிக்கெட் 53 சதவீத மானியத்தில் விற்கப்படுகிறது. ரூ.100 மதிப்புள்ள பயண டிக்கெட்டில் ரூ. 47 மட்டுமே பயணிகளிடம் வசூலிக்கப்படுகிறது. எஞ்சிய ரூ. 53-ஐ ரயில்வே அமைச்சகம் ஏற்று, சரக்குப் போக்குவரத்து மூலம் கிடைக்கும் லாபத்தில் இருந்து பயணிகளுக்கு அளித்து 53 சதவீத மானியத்தால் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்கிறது.

தேஜஸ் ரயிலில் ஏசி சேர் காரில் செல்ல ரூ. 895 செலுத்தினால் போதும். மூத்த குடிமக்களான ஆண்கள் ரூ.575, பெண்கள் ரூ. 495 செலுத்த வேண்டும். இந்த ரயில்களை தனியார் இயக்க ஆரம்பித்தால் கட்டணச் சலுகை நிறுத்தப்படும். சென்னை- மதுரை தேஜஸ் ரயிலுக்கும் இந்த நிலை வரலாம். இந்த ரயிலில் பயணிக்க தற்போதைய பயணக் கட்டணமான ரூ.895 என்பது இரு மடங்காகவோ அல்லது மூன்று மடங்காகவோ விமான டிக்கெட்டுக்கு இணையாக உயரலாம்.

தனியார் விமானப் போக்குவரத் தில் முதலில் குறைந்த கட்டணம் ஆசை காட்டி, படிப்படியாக உயர்த் தியதுபோல், தனியார் இயக்கும் ரயில்களிலும் இத்தகைய நிலை ஏற்படும்.

தனியார்மயத்தால் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள், பயணிகளுக்கான சலுகை, மூத்த குடிமக்கள் சலுகை பாதிக்கும். சரக்குப் போக்குவரத்துக் கட்டண மும் உயர்ந்து, விலைவாசியும் கூடும். அனைவரும் இணைந்து போராடினால்தான் தனியார் மயத்தை தொடக்கத்திலேயே தடுக் கலாம். இந்த நிலை தொடரு மானால் பல்லாயிரக்கணக்கான ரயில்வே ஊழியர்கள் நிரந்தர வேலைவாய்ப்பை இழக்க நேரிடும் அபாயம் உருவாகும் என்றார்.

பேட்டியின்போது எஸ்ஆர்எம்யூ மதுரைக் கோட்ட செயலர் ரபீக் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x