Published : 17 Jul 2019 01:46 PM
Last Updated : 17 Jul 2019 01:46 PM

புதிய கல்விக் கொள்கை விவகாரம்: சூர்யாவுக்குத் துணை நிற்போம் - இயக்குநர் பா.இரஞ்சித்

இயக்குநர் பா.இரஞ்சித்

புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் சூர்யாவுக்குத் துணை நிற்போம் என இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற அகரம் அறக்கட்டளையின் 40-வது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா, தேசியக் கல்விக் கொள்கையின் புதிய திட்டங்கள், 3 வயதிலேயே மும்மொழிக் கல்வியைத் திணிப்பதாகவும், ஆசிரியரே இல்லாமல் நீட் தேர்வு எழுதுவது எப்படி? என்றும் விமர்சித்தார்.
“30 கோடி மாணவர்களின் எதிர்காலம் தேசியக் கல்விக் கொள்கையில் உள்ளது. இதில் எதற்கு அவசரம்? பரிந்துரைகளை அளிக்க ஒரு மாத கால அவகாசம் மட்டும் அளித்தது ஏன்? ஏன் நாம் அத்தனை பேரும் வரைவு அறிக்கை குறித்து பேசவில்லை?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
சூர்யாவின் இந்தக் கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், சூர்யாவின் கருத்துக்கு இயக்குநர் பா.இரஞ்சித்தும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “புதிய கல்விக் கொள்கை பற்றி சூர்யாவின் கருத்தை வரவேற்கிறேன். இன்றைய கல்விச்சூழலில் மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார். சிறுபான்மையினர், பெண்கள், மாணவர்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்தும் பேசியும் செயல்பட்டு வரும் சூர்யாவுக்கு நாம் துணை நிற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x