Published : 06 Jun 2015 08:42 AM
Last Updated : 06 Jun 2015 08:42 AM

சென்னை மியூசிக் அகாடமியில் இசைப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை

சென்னையில் உள்ள ‘மியூசிக் அகாடமி’ ஆண்டுதோறும் டிசம்பர் - ஜனவரியில் இசை விழாக்களையும், அவ்வப்போது இசைக் கச்சேரி களையும் நடத்தி கர்னாடக இசைக்கு சிறந்த தொண்டாற்றி வருகிறது. இசை நிகழ்ச்சிகளுடன் ஆண்டுதோறும் டிசம்பர் - ஜனவரி மாதங்களில் இசை விற்பன்னர்கள், ஆர்வலர்களை அழைத்து கருத் தரங்குகளை நடத்துகிறது. ராக ஆராய்ச்சிகளை மேற்கொள்வோர் தங்களது கண்டுபிடிப்புகளை இந்த கருத்தரங்குகளில் தெரிவிக் கின்றனர். சங்கீத வித்வான்களிடம் இளம் வித்வான்கள், வித்வாம் சனிகள் நேரில் கேள்விகள் கேட்டு தங்களது சந்தேகங்களைப் போக்கிக்கொள்கின்றனர். வாக்கேயகாரர்கள் குறித்த அரிய தகவல்களையும் பாடல் பிறந்த கதைகளையும் இந்த அகாடமி உலகுக்குத் தெரிவிக்கிறது.

கர்னாடக இசைக்குப் பல வழிகளிலும் தொண்டு செய்து விரிவுரை மன்றமாகவும், ஆவணக் காப்பகமாகவும், ஆராய்ச்சிக் கூடமாகவும் விளங்கிவரும் அகாடமி, முதல்முறையாக இசைக் கலைஞர்களை உருவாக்கும் பணியிலும் நேரடியாக இறங்கி யிருக்கிறது.

வாய்ப்பாட்டுக் கலைஞர் களுக்கு சிறப்பு பட்டயப் படிப்புக்கான (Advanced Diploma in Carnatic Music, Vocal) முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர் சேர்க்கை குறித்து அகாடமி அறிவித்துள்ளது.

பட்ட வகுப்புகளைப் போலவே, இந்த பட்டய வகுப்பு 3 ஆண்டு களுக்கானது. ஒவ்வோர் ஆண்டும் 2 பருவங்கள் (செமஸ்டர்கள்). முதல் செமஸ்டர் ஜூலை மத்தியில் தொடங்கி நவம்பர் வரையிலும், அடுத்த செமஸ்டர் ஜனவரி மத்தியில் தொடங்கி ஜூன் இறுதி வரையிலும் நடைபெறும். முதலாண்டில் மொத்தம் 10 பேர் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

18 வயது முதல் 35 வயது வரையுள்ளவர்கள் விண்ணப் பிக்கத் தகுதியுள்ளவர்கள். மனோதர்ம சங்கீத ஞானத்துடன் வர்ணம், கீர்த்தனைகள் பாடத் தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் பிளஸ் 2 வரை படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இசையில் தங்களுக்குள்ள ஆர்வம், பயிற்சி, ஈடுபாடு, பின்னணி, முகவரி, தகவல் தொடர்புக்கான தொலைபேசி எண்கள் போன்ற முழுமையான தகல்களுடன் சுயவிவரக் குறிப்பையும் (Bio-Data) இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

மாணவர்களிடமிருந்து வரும் மனுக்களை தேர்வுக் குழுவினர் பரிசீலித்து, சேர்க்கைக்கு உகந்த வர்கள் என்று கருதுவோரை நேர்காணலுக்கு அழைப்பார்கள். அதன் பிறகு, மாணவர் சேர்க்கையில் தேர்வுக் குழுவினரின் முடிவே இறுதியானது.

விண்ணப்பங்கள் வந்துசேரு வதற்கான கடைசி தேதி: 2015 ஜூலை 4 (சனிக்கிழமை). முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்: 2015 ஜூலை 23.

இசைப் பயிற்சி அளிக்கவுள்ள கல்வியாளர்கள் குழுவுக்கு சங்கீத கலாநிதி ஆர்.வேதவல்லி இயக்குநராக இருப் பார். கல்விக்குழு ஒருங்கிணைப் பாளர்களாக சங்கீத கலாநிதி திருச்சூர் ராமச்சந்திரன், பேராசிரியர் ரித்தா ராஜன், விதூஷி டாக்டர் ஆர்.எஸ்.ஜெயலட்சுமி ஆகியோர் செயல்படுவர். சங்கீத கலா ஆச்சார்ய பி.எஸ்.நாராயணசுவாமி, சங்கீத கலா ஆச்சார்ய சுகுணா வரதாச்சாரி, வித்வான் நெய்வேலி சந்தானகோபாலன், விதூஷி எஸ்.சவும்யா, விதூஷி சியாமளா வெங்கடேஸ்வரன், வித்வான் ராம் பரசுராம் ஆகியோரும் கல்வியாளர் குழுவில் இடம்பெறுவர்.

மேலும் விவரங்களுக்கு

இந்த பட்டய வகுப்பு குறித்து மேலும் விவரங்களுக்கு அணுகவேண்டிய முகவரி: ‘தி மியூசிக் அகாடமி சென்னை’, (பழைய எண்:306), புதிய எண்:168, டிடிகே சாலை, ராயப்பேட்டை, சென்னை 600014, தொலைபேசி எண்: 044-28112231, 28115162, மின்னஞ்சல்: music@musicacademymadras.com/pappuvenu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x