Published : 14 May 2015 07:57 AM
Last Updated : 14 May 2015 07:57 AM

பிளஸ் 2 அறிவியல், வணிகவியலில் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் மதிப்பெண் குறைந்தது ஏன்? - தலைமை ஆசிரியர்களிடம் ஆய்வு

பிளஸ் 2 தேர்வில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் அறிவியல் குரூப், வணிகவியல் பாடத்தில் மதிப்பெண் குறைந்த தற்கான காரணங்களை மாநகராட்சி கல்வித் துறை ஆராய்ந்து வரு கிறது.

சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் கீழ் செயல்படும் 32 மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 6,202 மாணவ, மாணவிகள் கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர். இதில் 5,290 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 85.30 சதவீத தேர்ச்சியாகும். வணிகவியல் பாடத்தை முதன்மை பாடமாக எடுத்து படித்த மாணவிகளே முதல் 3 இடங்களைப் பிடித்தனர். 1100-க்கு மேல் மதிப்பெண் பெற்ற 49 மாணவர்களிலும் வணிக வியல் மாணவர்களே அதிகம் இடம்பெற்றனர். ஆனால், சில பள்ளிகளில் வணிகவியல் பாடத் தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வி அடைந் துள்ளனர். தேர்ச்சி குறைந்ததற்கு இதுவும் ஒரு காரணம் என்று சில பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு தேர்ச்சி 88.98 சதவீதமாகும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்ததற்கான காரணங்களை ஆராய மேயர் சைதை துரைசாமி தலைமையில் நேற்று முன்தினம் ஆய்வு கூட்டம் நடந்தது. மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற் றனர். அறிவியல் பாட மாண வர்கள் அதிக மதிப்பெண் பெறாதது, சில பள்ளிகளில் வணிக வியல் பாடத்தில் அதிக அளவில் மாணவர்கள் தோல்வி அடைந்தது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதுதொடர்பாக மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர் கூறும்போது, ‘‘கணிதம், அறி வியல் பாடங்களை தொடர்ந்து படித்துக்கொண்டே இருப்பது அவசியம். செய்முறைக்காக அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும். ஆனால், வணிகவியலில் செய் முறை தேர்வு கிடையாது. கடைசி நேரத்தில் படித்தாலும் மதிப்பெண் பெற முடியும். வணிகவியல் குரூப்பை தேர்வு செய்யும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுகின்றனர்’’ என்றார்.

இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அதிக மதிப்பெண் பெற்ற 49 மாணவர்களில் கணிதம், அறிவியல் குரூப் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால், தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் அளவுக்கு மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் 150 அதிகரித்துள்ளது.

கணிதம், அறிவியல் குரூப் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறாதது, சில பள்ளிகளில் அதிக மாணவர்கள் வணிகவியலில் தோல்வி அடைந்தது ஆகியவை குறித்து அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை அழைத்து ஆய்வு நடத்தி வரு கிறோம். காரணங்களைக் கண்ட றிந்து தீர்வு காணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x