Published : 23 May 2015 07:45 AM
Last Updated : 23 May 2015 07:45 AM

திருவில்லிபுத்தூர் கோயில் கும்பாபிஷேகம்

திருவில்லிபுத்தூரில் உள்ள வடபத் ரசயனர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

108 வைணவத் திருத்தலங்களில் முக்கிய திருத்தலமாக போற்றிப் புகழப்படுவது திருவில்லிபுத்தூர். ஆழ்வார்களிலே பெரியாழ்வார், ஆண்டாள் அவதரித்த புண்ணிய பூமி. இத்திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள எம்பெருமான் வடபத்ரசாயி பெருமாள். இத்த கைய சிறப்புமிக்க அருள்மிகு வடபத்ர சயனர் கோயில் கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி கடந்த 15-ம் தேதி முதல் 5 நாள்கள் ஹோமங் கள், சிறப்பு யாகசாலை பூஜை கள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து நேற்று காலை 8.20 மணிக்கு யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் எடுத்துவரப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தமிழக அரசு முத்திரைச் சின்னமான இக்கோயில் ராஜகோபுரம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டு 11 கலசங் களுக்கும் புனித நீர் ஊற்றப் பட்டது.

தொடர்ந்து ராஜகோபுரத்தின் உட்புறம் அமைந்துள்ள பெரி யாழ்வார் சன்னதி விமானம், வட பத்ரசயனர் பெருமாள் மூலஸ்தான விமானம், சக்கரத்தாழ்வார் விமானம், கோயிலுக்குப் பின்புறம் அமைந்துள்ள ஸால விமானம், முன்புறம் அமைந்துள்ள சிறிய கோபுரம், ஆண்டாள் பிறந்த நந்தவன விமானம் மற்றும் ராமானுஜர் சன்னதி, நம்மாழ்வார் சன்னதி, லெட்சுமி நரசிம்மர் சன்னதி ஆகிய சன்னதிகளிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் இருந்து கொண்டுவரப் பட்ட பட்டு வஸ்திரம் பெருமாளுக்கு சாற்றப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவியுடன் வடபத்ரசயனர் சிறப்பு அலங் காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கும்பாபிஷேகத்தை முன் னிட்டு மாவட்டக் காவல் கண்காணிப் பாளர் மகேஸ்வரன் தலைமையில் 800-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x