Last Updated : 21 May, 2015 07:56 AM

 

Published : 21 May 2015 07:56 AM
Last Updated : 21 May 2015 07:56 AM

கடலில் கண்காணிப்புப் பணிகளுக்காக கல்பாக்கத்தில் படகுத் தளம் அமைவதில் சிக்கல்: பாறைகள் நிறைந்த பகுதி என்பதால் ஆய்வு

கல்பாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் பாறைகள் நிறைந்து காணப்படுவ தால், கடலோர பாதுகாப்பு படை படகுத் தளம் அமைப்பதில் தொழில் நுட்ப ரீதியாக சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாடகை படகுகள் மூலம் ரோந்து பணிகளை மேற்கொள்ள கடலோர பாது காப்பு படை திட்டமிட்டுள்ளது.

காஞ்சிபுர மாவட்டத்தின் கடலோரப் பகுதியில் கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் மாமல்லபுரம் சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது. கடல்மார்க்க அச்சுறுத்தலின்றி பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியாக இவை உள்ளன. இதனால், கடற்கரை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலையில் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக கிழக்கு கடற்கரைச் சாலையில் 8 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப் பட்டு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு கடல்மார்க்கமாக தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் கடலில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த கல்பாக்கம் கடல் பகுதியில் ரோந்து படகுத் தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான இடத்தை தேர்வு செய்ய இரு மாதங்களுக்கு முன்பு கடலோர பாதுகாப்பு படை ஏடிஜிபி சைலேந்திர பாபு இங்கு ஆய்வு மேற்கொண்டார்.

இதை தொடர்ந்து, கடலோர பாதுகாப்பு படையின் தொழில் நுட்ப வல்லுநர் குழு கல்பாக்கம் பனையூர் மற்றும் அதை சுற்றியுள்ள கடல் பகுதிகளை பார்வையிட்டு படகுதளம் அமைப்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டது.

இந்நிலையில் மாமல்லபுரம், கல்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள கடல் பகுதிகள் பாறைகள் நிறைந்து காணப் படுவதால், படகுகளை நிறுத்து வதற்கான ஆழம் மற்றும் படகுதளம் அமைப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை கடலில் ஏற்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளதாக தொழில்நுட்ப குழு வினர் தெரிவித்துள்ளனர். அத னால், ரப்பர் தடுப்புகளை கொண்டு படகுதளம் அமைப்பதற்கான ஆய்வுகள் தற்போது நடந்து வருகிறது. இதை தொடர்ந்து, வாடகைக்கு படகு அமர்த்தி ரோந்து பணிகளில் ஈடுபட உள்ளதாக கடலோர பாதுகாப்பு படை தெரிவித்து ள்ளது.

இதுகுறித்து, மாமல்லபுரம் கடலோர பதுகாப்பு குழும ஆய்வாளர் வேலு கூறியதாவது: கல்பாக்கம் பகுதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணங்களுக்காக கல்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள 20 கடல் மைல் தொலைவை, கடலோர பாது காப்பு படையினர் கண் காணித்து வருகின்றனர். படகுத் தளம் அமையும் வரை, நவீன படகுகளை வாடகைக்கு எடுத்து அதன் மூலம் கடலில் ரோந்து பணியில் ஈடுபட உள்ளோம். சிஎஸ்எப் வீரர்களுடன், கடலோர பாதுகாப்பு படை வீரர்களும் துப்பாக்கி ஏந்தி விரைவில் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், கடலோர பாதுகாப்பு படைக்கு தனி கமெண்டர் நியமிக்கப்பட் டுள்ளதால், அவரது ஆலோச னையின்பேரில் ரோந்து மற்றும் கடற்கரை கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x