Published : 15 May 2015 07:40 AM
Last Updated : 15 May 2015 07:40 AM

தலைமை நீதிபதி மீது புகார் இருந்தால் சட்டரீதியாக மட்டுமே அணுக வேண்டும்: வழக்கறிஞர்கள் கருத்து

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து மீது முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ வெளியிட்டு வரும் கருத்துக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொதுவெளியில் இவ்வாறு கூறுவதைத் தவிர்த்து, உரிய ஆதாரங்களுடன், அதை சட்ட ரீதியாக மட்டுமே கையாள வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யாக இருப்பவர் எச்.எல்.தத்து. அவரது சொத்து விவரங்கள் குறித்து, முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூவின் பெயரில் உள்ள ‘பேஸ்புக்’ பக்கத்தில் சில தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இதுதொடர்பாக தன்னிடம் ஆவணங்கள் இருப்பதாகவும், தற்போது வெளிநாட்டில் இருப் பதால் இந்தியா வந்ததும் தரத் தயாராக இருப்பதாகவும் ஒரு பத்திரிகையாளருக்கு மார்கண் டேய கட்ஜூ மின்னஞ்சல் அனுப் பியதாகவும் அந்த பேஸ்புக் பக்கத் தில் உள்ளது.

இந்த விவகாரம் குறித்து பலர் அதே பேஸ்புக் பக்கத்தில் எழுப்பியுள்ள கேள்வி களுக்கும் கட்ஜூவின் பெயரி லேயே பதில்களும் அளிக்கப் பட்டுள்ளன.

இந்த விவரங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, சிலர் விவாதமாக ஆக்கத் தொடங்கி உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரி வித்துள்ள வழக்கறிஞர்களின் கருத்து வருமாறு:

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து மீது முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தெரிவித் துள்ளதாக உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தீவிரமாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. இந்தக் குற்றச்சாட்டுகளில் எந்த அளவுக்கு உண்மை இருக்க முடியும் என்று யோசிக்க வேண்டும். இதில் உண்மை இருந்தால் அதை கட்ஜூ இவ்வாறு சமூக வலைதளங்களில் விமர்சிப்பதை விடுத்து சட்டரீதியாக மட்டுமே கையாள வேண்டும்.

பி.வில்சன், முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்:

மேலும், உயர்ந்த பதவியில் இருக்கும் தலைமை நீதிபதி மீது, போகிற போக் கில் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கும் போது அது மக்கள் மத்தி யில் நீதித்துறை மீது அவ நம்பிக்கையை ஏற்படுத்தும்.

டி.செல்வம், தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர்:

நீதிபதியாக இருந்துள்ள மார்கண்டேய கட்ஜூ, இப்படி கருத்துகள் தெரிவித்திருந் தால் அது தவறான செயல். மேலும், அவர் தெரிவிக்கும் பெரும்பாலான குற்றச்சாட்டுகள், பரபரப்பு கருதியே வெளியிடப்படு வதாக ஒரு எண்ணம் ஏற்கெனவே பரவி உள்ளது. சட்டரீதியாக கையாண்டு குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வழி இருக்கும்போது, இவ்வாறு பொதுவெளியில் கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன?

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x