Published : 18 May 2015 07:57 AM
Last Updated : 18 May 2015 07:57 AM

தொழிற்சாலைகள் நிறைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகங்கள் அமைக்கப்படுமா?- அரசுக்கு கருத்துரு அனுப்பியது மாவட்ட நிர்வாகம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூடு தல் தொழிலாளர் ஆணையர் அலுவலகங்களை அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஏரிகள் நிறைந்த மாவட்டம் என்ற பெயர் பெற்றிருந்த காஞ்சி புரம் மாவட்டம், தற்போது தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாக விளங்குகிறது. பல பன்னாட்டு தொழிற்சாலைகள் உட்பட 2 ஆயிரம் தொழிற் சாலைகள் காஞ்சிபுரம் மாவட் டத்தில் இயங்கி வருகின் றன. குறிப்பாக பெரும்புதூர், மறைமலைநகர், ஒரகடம் ஆகிய பகுதிகள் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளாக உள்ளன.

இந்த நிறுவனங்களில் சுமார் 2 லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலா ளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந் நிலையில், தொழிற்சாலை நிர்வாகங்களுக்கும் தொழிலா ளர்களுக்கும் இடையே ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க மேலும் சில உதவி தொழிலாளர் ஆணையர் அலுவலகங்களை அமைக்க வேண்டும் என தொழிற் சங்கங்கள் கோரி வருகின்றன.

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட சிஐடியு தொழிற் சங்கத் தலைவர் இ.முத்துகுமார் கூறியதாவது: பல தொழிற்சாலை களில் தொழிலாளர் ஊதியத்தி லிருந்து வருங்கால வைப்புநிதி மற்றும் இஎஸ்ஐ பிடித்தம் செய்யப்படுகிறது. அவை முறையாக அந்தந்த நிறுவனங் களுக்கு செலுத்தப்படுவ தில்லை. பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி போராட் டம் நடத்தினாலும் தொழிற் சாலை நிர்வாகங்கள் தொழிற் சங்கங்களை அழைத்து பேசுவதில்லை. இவ்விவகார ங்களில் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தாலும் நடவ டிக்கை எடுப்பதில்லை. தொழிலா ளர்களின் குறைகளை கேட்க மாதந்தோறும் தொழிலாளர் கூட்ட மும் நடத்துவதில்லை.

தமிழகத்தில் மட்டும் தொழிற் சாலை- தொழிலாளர் சார்ந்த 700 வழக்குகள் உள்ளன. இதில் 350 வழக்குகள் காஞ்சி புரம் மாவட்டத்தில் மட்டும் உள்ளன. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இருங் காட்டுக்கோட்டையில் மட்டும் உதவி தொழிலாளர் ஆணையர் அலுவலகம் அமைக்கப்பட்டு ள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேச்சு வார்த்தைக்கு இருங்காட்டுக் கோட்டைக்கு வரவேண்டி யுள்ளது. கூடுதலாக மறைமலை நகர், காஞ்சிபுரத்தில் உதவி தொழிலாளர் ஆணையர் அலு வலகங்களைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூடுதலாக உதவி தொழிலாளர் ஆணையர் அலுவல கங்களை திறப்பது தொடர்பாக அரசுக்கு கருத்துரு அனுப்பப் பட்டுள்ளது. அதை அரசு பரிசீலித்து முடிவெடுக்கும். மாதந் தோறும் தொழிலாளர் கூட்டங்கள் நடத்துவது தொடர்பாகவும் பரிசீலிக்கப்படும் என்றார் அவர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x