Published : 24 Mar 2014 09:06 AM
Last Updated : 24 Mar 2014 09:06 AM

காங். கட்சிக்குள் ஒற்றுமை நிலவுகிறது: நாராயணசாமி

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையாக உள்ளனர். தேர்தல் பிரசாரத்துக்காக சோனியா, ராகுல் புதுச்சேரி வரவுள்ளனர் என்று காங்கிரஸ் வேட்பாளரும் மத்திய அமைச்சருமான நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கடந்த 5 ஆண்டு ஆண்டுகளில் நிறைவேற்றிய திட்டங்கள் தொடர்பான சாதனை மலர் வெளியீட்டு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதையடுத்து செய்தியாளர்களிடம் நாராயணசாமி கூறியதாவது:

புதுவை வளர்ச்சிக்கு தடை யாக நானும், மத்திய அரசும் இருப்ப தாக ரங்கசாமி கூறிவருகிறார். உண்மையில் கடந்த 5 ஆண்டு களில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

என்.ஆர்.காங்கிரஸ் அரசால் மக்கள் வேதனை அடைந்துள்ள னர். மாநில அரசு பல திட்டங் களை முடக்கியுள்ளது. சுற்றுலா பெருமளவில் பாதிக்கப்பட்டுள் ளது. கடந்த தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த இலவச லேப்டாப், இலவச மிக்சி, கிரைண்டர், வாஷிங் மிஷின் ஆகிய திட்டங்களை ரங்கசாமி நிறைவேற்றவில்லை.

மக்களை நம்பி தேர்தலைச் சந்திக்கிறேன். புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்துக்கு சோனியா, ராகுல் வருவதாக தெரிவித்துள்ள னர். விரைவில் புதுச்சேரி தொகுதிக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.

புதுச்சேரி காங்கிரஸில் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். எம்பி கண்ணனை விரைவில் சந்திக்க உள்ளேன்.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய நீதிக்கட்சி, இந்திய குடியரசுக்கட்சி, முஸ்லிம் லீக், படைப்பாளி கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக யார் கூறுகிறார்கள்? சில தொலைக்காட்சிகள் தான் அவ்வாறு தெரிவிக்கின்றன. 70 சதவீத கிராம மக்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். நகர்புறத்தில் உள்ள 15 சதவீதத்தினர் தலை விதியை நிர்ணயிக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டார்.

பேட்டியின் போது எதிர்க் கட்சித்தலைவர் வைத்திலிங்கம், பொதுச்செயலர் ஏ.கேடி. ஆறுமுகம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா, முன்னாள் அமைச்சர் ஷாஜகான், முன்னாள் எம்எல்ஏ பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x