Published : 11 Mar 2015 05:09 PM
Last Updated : 11 Mar 2015 05:09 PM

7 நிபந்தனைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசு ஏற்கத் தயார்: பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

சென்னை, கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசு ஏற்று நடத்தத் தயாராக இருப்பதாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இதற்காக 7 நிபந்தனைகளையும் அவர் முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு நேற்று அவர் எழுதியுள்ள கடிதத் தில் கூறியிருப்பதாவது:

மத்திய தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகம் (இஎஸ்ஐ) மருத் துவக் கல்வி திட்டங்களை கைவிடப் போவதாக அறிவித்துள்ளது. இது, இஎஸ்ஐ கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை அதிர்ச்சிக்குள் ளாக்கி இருக்கிறது. தமிழகத்தில் சென்னையிலும் கோவையிலும் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

2013-14-ம் கல்வி ஆண்டு முதல் செயல்பட்டு வரும் சென்னை (கே.கே.நகர்) இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் ஆண்டுதோறும் 100 மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். நடப்பு கல்வி ஆண்டில் (2014-15) முதுநிலை மருத்துவப் படிப்பில் 38 பேர் சேர்க்கப்பட்டனர்.

தற்போது கட்டுமானப் பணிகள் நடந்து வரும் கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிக்கு இன்னும் இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) அனுமதி பெறப் படவில்லை. குறிப்பிட்ட நிபந்தனை களுக்கு உட்பட்டு இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளை ஏற்று நடத்துவது தொடர்பாக மாநில அரசுகளிடம் கொள்கை அளவில் ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது.

சென்னை மருத்துவக் கல்லூரி ரூ.494.62 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளதாகவும், கோவை மருத்துவக் கல்லூரி ரூ.580.57 கோடி மதிப் பீட்டில் கட்டப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர். இரு கல்லூரிக ளுக்கும் மீதமுள்ள கட்டுமானப் பணி செலவுக்காக தமிழக அரசு ரூ.571.23 கோடி வழங்க வேண்டும் என்பது இஎஸ்ஐ விதித்துள்ள நிபந்தனைகளில் ஒன்று.

மாநில அரசு சார்பில் மருத்து வக் கல்லூரி மற்றும் மருத்துவ மனை அமைப்பதற்கு ரூ.200 கோடி செலவாகும் என்ற மதிப்பீடு உள்ள நிலையில், மேற்கண்ட இரு மருத்துவக் கல்லூரி திட்டங்களுக்கான நிதிச்செலவு மிக மிக அதிகம். மாணவர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், சில நிபந்தனைகளுடன் சென்னை, கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசு ஏற்று நடத்த தயாராக இருக்கிறது. அதற்கு கொள்கை அளவிலான ஒப்புதலை அளிக்கிறது.

தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு, தமிழக அரசின் நிபந்தனைகளை சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்களை ஏற்கச்செய்தால் மகிழ்ச்சி அடைவேன்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

நிபந்தனைகள்

1. கட்டுமானம் மற்றும் மருத்துவச் சாதனங்களுக்கான எஞ்சிய முதலீட்டுச் செலவு ரூ.571.23 கோடியை இஎஸ்ஐ கழகமே ஏற்க வேண்டும்.

2. மருத்துவக் கல்லூரியின் தொடர் செலவினத்தை மாநில அரசு ஏற்கும்.

3. மருத்துவமனையின் தொடர் செலவினம் இஎஸ்ஐ-யின் பணம் திரும்பிக்கொடுக்கும் முறைப்படி ஏற்கப்பட வேண்டும். அதாவது செலவினத்தில் 87.5 % தொகையை மத்திய அரசு ஏற்க வேண்டும்.

4. இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் அனைவரும் மாநில அரசு பணியாளர்களாக மாற்றப்படுவர். எனவே, மாநில அரசின் ஊதிய விகிதத்துக்கும், விதிமுறைகளுக்கும் அவர்கள் சம்மதம் தெரிவிக்க வேண்டும்.

5. மருத்துவமனை தொடர்ந்து இஎஸ்ஐ மருத்துவமனையாகவே செயல்படும்.

6. தற்போது இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 65 % இடங்கள் மாநில அரசின் ஒதுக்கீட்டுக்கும், 15 % இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும், மீதமுள்ள 20 % இடங்கள் இஎஸ்ஐ ஊழியர்களுக்கும் வழங்கப்படுகின்றன. தமிழக அரசு கல்லூரியை ஏற்றுக்கொண்ட பிறகு, 85 % இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கும், 15 % இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் வழங்க வேண்டும்.

7. மருத்துவ கவுன்சில் நிபந்தனைைப்படி, நிலம் மற்றும் கட்டிடத்தின் உரிமை மாநில அரசுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x