Published : 27 Mar 2015 04:58 PM
Last Updated : 27 Mar 2015 04:58 PM

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நடத்தும் ஊடகவியல் மாணவர்களுக்கான குறும்படப் போட்டி

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஊடகவியல் மாணவர்களுக்கான குறும்படப் போட்டியை நடத்துகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசாக அளிக்கப்பட உள்ளது.

தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் அமைக்கப்பட உள்ளது. இக்காட்சிக் கூடத்தைக் காண வரும் பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் குறும்படங்களைத் தயாரிப்பது தொடர்பாக ஊடகவியல், காட்சி ஊடகவியல் மாணவர்களுக்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் போட்டி ஒன்றை முதல் முறையாக நடத்தத் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, திரைப்படக் கல்லூரிகள், ஊடகத் தொடர்பியல், காட்சி ஊடகவியல் துறை கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம்.

போட்டியில் பங்கேற்கும் படைப்புகளில் திரைக்காட்சி உரை (script) முதலில் அனுப்பப்படவேண்டும். அவற்றைக் குழு ஆய்வு செய்து, தகுதியான படைப்புகள் அறிவிக்கப்படும். அவற்றைக் குறும்படங்களாகப் படம் எடுத்து, குறுந்தகடாக அனுப்ப வேண்டும்.

அவற்றில் சிறந்த மூன்று படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் பரிசாக ரூ. 5 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ. 3 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ. 2 லட்சம் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்போருக்குச் சான்றிதழும் வழங்கப்படும்.

ஒவ்வொரு படமும் தலா 15 மணித்துளிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

போட்டிக்கான திரைக்காட்சி உரைகள், குறிப்பிட்ட மாணவரின் முகவரி, மின்னஞ்சல், கைபேசி எண் ஆகிய விவரங்களை 15.04.2015-க்குள் நிறுவனத்துக்கு வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு :

முனைவர் ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர்

பொறுப்பாளர், பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

தரமணி, சென்னை 600 113

தொடர்பு எண்: +91 9789016815

மின்னஞ்சல்: tamilmano77@gmail.com

இணையதளம்: www.ulakaththamizh.org

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x