Published : 30 Jan 2015 10:03 AM
Last Updated : 30 Jan 2015 10:03 AM

சென்னையில் மாணவர்களின் நாடக விழா

புனித பிரிட்டோ தியேட்டர் அகாடெமி சார்பில் 600 மாணவர்கள் பங்கேற்ற நாடக விழா சென்னை காமராஜர் அரங்கில் நேற்று தொடங்கியது.

முதல் நாள் நிகழ்ச்சியில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் விஷால், யுடிவி தனஞ்செயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நாடக விழா குறித்து புனித.பிரிட்டோ தியேட்டர் அகாடெமியின் இயக்குநர் விமலா பிரிட்டோ கூறியதாவது :

இந்த நாடக விழா மூன்று நாட்கள் நடைபெறவுள்ளன. காலை 10 மணிக்கு ஒரு காட்சியும், மாலை 6 மணிக்கு மற்றொரு காட்சியும் நடக்கிறது. நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து நடிகர்களாக உருவாக்க இந்த நவீன நாடகங்களை நடத்தி வருகிறோம். முதல் நாள் நிகழ்ச்சியில் ‘ராஜ பேரிகை’ நாடகத்தின் தமிழ், ஆங்கில வடிவங்கள் இடம்பெற்றன. ‘அன்பின் சிறகுகள்’ என்ற நாடகத்தில் 8 வயது முதல் 20 வயது வரையிலான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ் சினிமாவின் முன்னோடியாக இருப்பது நாடகங் கள் தான். ஆனால் சினிமாவின் வருகைக்குப் பிறகு நாடகங்கள் பொலிவை இழந்து விட்டன. அதே நேரத்தில் சினிமாவை கண்டுபிடித்த ஹாலிவுட்டில் இன்றும் நாடகங்களுக்கு தனி மவுசு உள்ளது.

தமிழ் நாடக உலகில் ஏற்பட்டுள்ள இடைவெளியை நிரப்பும் நோக்கிலும், சர்வதேச தரத்தில் நாடகங்களை மேடை யேற்றும் நோக்கிலும் இந்த நாடக விழாவை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x