Published : 08 Jul 2019 10:10 AM
Last Updated : 08 Jul 2019 10:10 AM

ஹாட்லீக்ஸ் : உதயநிதிக்கு ஸ்டாலின் அட்வைஸ்

நாள் கிழமை எல்லாம் பார்த்து மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியின் இளவரசு பட்டம் சூட்டிவிட்டார் ஸ்டாலின். உதயநிதி பதவியேற்கப் போகிறார் என்றதுமே சேனல்களில் அதுபற்றிய விவாதங்கள் களைகட்டின.

“கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களைப் பதவி தானாகவே தேடி வரும்” என திமுகவினர் கருத்துச் சொல்ல... “அப்படியானால், ஒரு கோடிதிமுக தொண்டர்களில் உதயநிதிக்கு மட்டும்தான் அந்தத் தகுதி இருக்கிறதா?” என சிலர் எதிர்வாதமும் செய்கிறார்கள்.

இதெல்லாம் எதிர்பார்த்த ஒன்றுதான் எனக் கருத்துத் தெரிவித்திருக்கும் ஸ்டாலின், “நீ எங்கே போனாலும் வாரிசு அரசியலைப் பற்றித்தான் கேள்வி ட்பார்கள்.

அதனால் மீடியாக்களிடம் இப்போதைக்கு எதுவும் மூச்சுவிட வேண்டாம்; அமைதியாய் இரு”என்று  மகனுக்கு அட்வைஸ் செய்திருக்கிறாராம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x