Published : 05 Aug 2017 09:25 AM
Last Updated : 05 Aug 2017 09:25 AM

நிதி, பதிவு மற்றும் கால்நடை துறை சார்பில் ரூ.26 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிதி, பதிவு, மீன்வளம், கால்நடை ஆகிய துறைகளுக்காக ரூ.26 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதல்வர் கே.பழனிசாமி திறந்துவைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வரும் பதிவுத்துறை அலுவலகங்களுக்கு பதில் சொந்த கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கப் பட்டு வருகின்றன. கடந்த 6 ஆண்டு களில் 33 சார் பதிவாளர் அலுவல கங்கள் உட்பட 19 பதிவுத்துறை ஒருங்கிணைந்த அலுவலகங்கள் மற்றும் 153 சார் பதிவாளர் அலுவலகங்கள் கட்டி திறக்கப் பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் ரூ.55 லட்சத் தில் கட்டப்பட்டுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தை முதல்வர் கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார். நிதித்துறை சார்பில் திருச்சி மாவட்டம் ரங்கம், திருவெறும் பூரில் தலா ரூ.60 லட்சம் மதிப் பில் கட்டப்பட்டுள்ள சார் கருவூலங் களையும் அவர் திறந்துவைத்தார்.

மீன்வளத் துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ் கோடியில் ரூ.8 கோடியிலும், டி.மாரியூரில் ரூ.3 கோடியே 90 லட்சத்திலும் அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்குதளங்கள், மதுரை பால் பண்ணையில் ரூ.85 லட்சத் தில் செயற்கை கருவூட்டல் பயிற்சி மையம், மதுரை, கோவை பால்பண்ணைகளில் ரூ.3 கோடியே 20 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள தானியங்கி பல அடுக்கு பால் பவுடர் சேமிப்பு கிடங்குகள், சென்னை அடையாறு இந்திரா நகரில் ரூ.56 லட்சத்தில் அமைக் கப்பட்டுள்ள அதிநவீன ஆவின் பாலகம் ஆகியவற்றையும் முதல் வர் திறந்துவைத்தார்.

மேலும், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் ரூ.6 கோடியே 48 லட்சத் தில் கால்நடை மருத்துவக் கல்லூரி யில் நிறுவப்பட்டுள்ள ஆதார செல் ஆய்வு மையம், ஒரத்தநாட்டில் ரூ.1 கோடியே 94 லட்சத்தில் கட்டப் பட்டுள்ள தீவன பதப்படுத்தும் பிரிவு கட்டிடம் ஆகியவற்றையும் முதல்வர் கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், வெல்லமண்டி நடராஜன், கே.டி.ராஜேந்திர பாலாஜி, கே.சி.வீரமணி, எம்.மணிகண்டன், பாலகிருஷ்ண ரெட்டி, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், செயலர்கள் க.சண்முகம், ஹன்ஸ்ராஜ் வர்மா, ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x