Published : 24 Jul 2017 10:01 AM
Last Updated : 24 Jul 2017 10:01 AM

ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக திட்டமிடுபவர்கள் 25 வயதுக்குள் தேர்ச்சி பெற தீவிரமாக முயற்சிக்க வேண்டும்: முன்னாள் டிஜிபி நடராஜ் அறிவுரை

சென்னை போட்டித் தேர்வுக்கு தயாரா கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ‘காவல்துறையில் உள்ள வாய்ப்புகளும், சவால்க ளும்’ என்ற தலைப்பில் வழிகாட்டு தல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மயிலாப்பூர் எம்எல்ஏ ஆர்.நடராஜ் மாணவர் களிடையே பேசியதாவது: மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் பல்வேறு தேர்வுகள் குறித்து மாணவர்கள் இடையே புரிதல் இல்லை. பள்ளிப் படிப்பை முடித்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களின் சதவீதம் தமிழகத்தில் 44 சதவீதமாக உள்ளது. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் இது அதிகமாகும். இருப்பினும் யுபிஎஸ்சி தேர்வு கள் என்று வரும்போது சுமார் 3,000 பணியிடங்கள் இருந்தால் அதில் 110 முதல் 130 பேர் தான் தமிழகத்தில் இருந்து தேர்வா கின்றனர். உயர்கல்வி பயில்வோ ரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி மாணவர்களின் எண் ணிக்கை குறைவாக உள்ளது. இந்த எண்ணிக்கையானது அதிக ரிக்க வேண்டும். மாணவர்கள் போட்டித் தேர்வு களுக்கு பல மணி நேரம் தொடர்ந்து படிப்பதைவிட, திட்ட மிட்டு படித்தால்தான் வெற்றி பெற முடியும். அதேபோல, தூக் கத்தை தொலைத்துவிட்டு படிக் கக்கூடாது. அரைமனதோடு தேர்வுகளை எதிர்கொள்ளாமல் ஈடுபாட்டுடன் மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். மேலும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் உயர்பதவி களைப் பெற வேண்டுமானால் 25 வயதுக்குள் தேர்ச்சி பெற முயற் சிக்க வேண்டும். அதிகபட்சம் 30 வயதுக்குள் தேர்ச்சி பெற்றால் தான் உயர் பதவிகளை அடைய முடியும். எனவே, இலக்கு வைத்து படிப்பது அவசியம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x