Published : 24 Jul 2017 09:01 AM
Last Updated : 24 Jul 2017 09:01 AM

கதிராமங்கலம் ஆதரவு போராட்டமா? - மெரினாவில் போலீஸ் குவிப்பு

கதிராமங்கலத்துக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் போராட் டம் நடக்கப்போவதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவலையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக பொது மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வயல்வெளியில் எண்ணெய் குழாய் பதிப்பதற்கும், எரிவாயு எடுப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களுடன் மாணவ, மாணவிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால், அங்கு போலீஸார் தொடர்ந்து குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்துக்கு ஆதரவாக பல் வேறு கருத்துகள் தினமும் வலை தளங்களில் வெளியாகின்றன.

இந்நிலையில், கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையிலும் மாணவ, மாணவிகள் ஏராள மானோர் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக உளவுப்பிரிவு போலீ ஸாருக்கு தகவல் கிடைத்தது.

ஏற்கெனவே, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் குவிந்தவர் களை அப்புறப்படுத்த போலீஸார் பெரும் பாடுபட்டனர். எனவே, அதே போல் ஒரு சம்பவம் மீண்டும் நடந்து விடக்கூடாது என்பதற்காக கதிராமங்கல ஆதரவு போராட் டத்தை முன்கூட்டியே தடுக்கும் வகையில் ஏராளமான போலீஸார் மெரினாவில் நிறுத்தப்பட்டனர்.

நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம்வரை ரோந்து போலீஸாரும் கண்காணிப்பு பணி யில் ஈடுபடுத்தப்பட்டனர். பேருந்து நிறுத்தங்களில் மொத்தமாக யாராவது வந்து இறங்குகிறார்களா எனவும் கண்காணிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x