Published : 26 Jul 2017 10:45 AM
Last Updated : 26 Jul 2017 10:45 AM

இஸ்லாமிய இயக்கத்தினரை கடத்த முயன்ற வழக்கு; பெங்களூரு குண்டுவெடிப்பு கைதிகள் 3 பேர் கோவை சிறையில் அடைப்பு: ஆகஸ்ட் 7 வரை நீதிமன்றக் காவல்

கோவையில் இஸ்லாமிய இயக்கத் தினரை கடத்த முயன்றதாக தொடர்ந்த வழக்கில் பெங்களூரு குண்டுவெடிப்பு கைதி கிச்சன் புஹாரி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ]

கோவையைச் சேர்ந்த திராவிட விடுதலைக் கழக நிர்வாகி பரூக் (31), கடந்த மார்ச் 16-ம் தேதி உக் கடம் அருகே கொலை செய்யப்பட் டார். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப் பட்டது. இந்நிலையில், கடந்த மே மாதம் சுன்னத் ஜமாத் ஐக்கியக் கூட்டமைப் பின் பொதுச் செயலாளரும், தொழில் அதிபருமான இணயத்துல் லாஹ் என்பவரைக் கடத்த திட்ட மிட்டதாக கடந்த மே மாதம் கோவையில் ஒரு கும்பல் கைதா னது. விசாரணையில், பாரூக் கொலை வழக்கில் கைதானவர் களுக்கான சட்ட உதவிக்கும், அவர்களது குடும்பத்தினருக்கான நிதியுதவிக்கும் தொழிலதிபர் களைக் கடத்த அக்குழு திட்ட மிட்டது தெரியவந்தது.

இதுகுறித்து விசாரித்த உக்கடம் போலீஸார், சிட்டிபாபு, அப்துல்சேட், முஹம்மது பெரோஸ், டேவிட் ரெசின்குமார், நவுபல் ரிசுவான், பழனி அப்பாஸ், சபிக் ரகுமான், ஜின்னா (எ) ஜீவானந்தம் ஆகிய 8 பேரை கைது செய்தனர். மேலும், பெங்களூரு பாஜக அலுவலக குண்டுவெடிப்பு வழக் கில் கைதாகி, பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் நெல்லையைச் சேர்ந்த கிச்சன்புஹாரி(41), கரும் புக்கடையைச் சேர்ந்த ஜூல்பிகார் அலி, அஸ்கர் அலி(33) ஆகியோரையும் வழக்கில் சேர்த் தனர்.

அவர்களை அதிகாரப் பூர்வமாக கைது செய் வதற்கான சம்மனை கோவை போலீஸார் பெங்களூரு சிறைக்கு அனுப்பி வைத்தனர். அதன் அடிப்படையில், நேற்று மூவரும், பெங்களூரு சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் கோவை அழைத்து வரப்பட்டு 5-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மூவரையும் ஆக.7-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட மூவரும், இன்று (26-ம் தேதி) பெங்களூரு சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x