Published : 15 Nov 2014 10:26 am

Updated : 15 Nov 2014 10:26 am

 

Published : 15 Nov 2014 10:26 AM
Last Updated : 15 Nov 2014 10:26 AM

ராகுல் குல்லார் - இவரைத் தெரியுமா?

$ தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) தலைவர். அடுத்த ஆண்டு மே மாதம் வரை இந்த பொறுப்பில் இருப்பார்.

$ 1975-ம் ஆண்டு டெல்லி பிரிவை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி. டிராய் தலைவர் பொறுப்புக்கு முன்பு வணிகத்துறை செயலாளராக இருந்தார்.

$ மேலும் மத்திய அரசின் பல முக்கிய பொறுப்புகளை வகித்திருக்கிறார். டெல்லி முதலமைச்சர் அலுவலகம், பிரதமரின் அலுவக செயலாளர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்த காலத்தில் அவருடைய தனிப்பட்ட செயலாளர் முக்கிய பொறுப்புகளை வகித்திருக்கிறார்.

$ பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பட்டமும், பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். பாஸ்டன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில பல்கலைக்கழங்களில் கவுரவ பேராசியராகவும் இருந்திருக்கிறார்.

$ மணிலாவில் இருக்கும் ஆசிய மேம்பாட்டு வங்கியில் தலைமை பொருளாதார அறிஞராக 1994-ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை இருந்தார்.


ராகுல் குல்லார்இவரைத் தெரியுமா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like


More From This Category

More From this Author