Published : 30 Jul 2017 09:52 AM
Last Updated : 30 Jul 2017 09:52 AM

உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு தயங்குகிறது: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக அரசு தயங்குகிறது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தை கள் உள்ளிட்ட கட்சியினர் தமாகாவில் இணையும் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது. கட்சியில் இணைந்த வர்களை வரவேற்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது:

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். 50 ஆண்டுகளுக்கு முந்தைய காமராஜர் ஆட்சி வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அரசியலில் தூய்மை, நேர்மை, எளிமையுடன் இருக்கும் தமாகாவை ஆதரித்து வாக்க ளிக்க மக்கள் தயாராக உள்ள னர்.

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நடிகர் கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோர் அரசிய லுக்கு வரப்போவதாக சொல் கின்றனர். அவர்கள் அரசிய லுக்கு வருவதால் தமாகா வுக்கு எந்தக் கவலையும் இல்லை. இளைஞர்கள், மாணவர்கள், தொண்டர்களைத்தான் தமாகா நம்பியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக அரசு தயங்கு கிறது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு பெறுதல், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தல், ஜிஎஸ்டி வரி விதிப் பில் மாற்றங்களை செய்தல், குடிநீர் தட்டுப்பாட்டை போக்குதல் போன்றவற்றில் மத்திய, மாநில அரசுகள் தனிக்கவனம் செலுத்த வேண் டும். இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தமாகா மூத்த துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், துணைத் தலைவர் கோவை தங்கம், இளைஞரணி தலைவர் யுவராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x