Published : 24 Jan 2016 03:22 PM
Last Updated : 24 Jan 2016 03:22 PM

சாதி, மத எதிர்ப்புக் கொள்கையில் திமுக, அதிமுக உறுதியிழந்து விட்டது: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

பெரியாருக்குப் பிறகு திமுக, அதிமுக கட்சிகள் சாதிய, மத எதிர்ப்புக் கொள்கைகளில் உறுதியிழந்து விட்டது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தருமபுரியில் நேற்று தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிக்கான பொதுக் கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று மாலை நடந்தது. அதற்காக தருமபுரி வந்திருந்த கட்சி யின் மாநில செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெரியாருக்குப் பிறகு தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகள் இரண்டும் சாதி, மத வாத எதிர்ப்புப் கொள்கை களில் உறுதியிழந்து விட்டது. இந்த இரு கட்சிகளும் பாஜக, காங் கிரஸைப் போன்றே பொருளாதாரக் கொள்கைகளை கடைபிடித்து வரு கிறது. ஊழல் செய்வதிலும் இரு கட்சி களுக்கு இடையே வேறுபாடு இல்லை. இரு கட்சிகளின் தலைமை யும் ஊழல் வழக்குகளில் சிக்கி யுள்ளது.

தமிழகத்தில் 2011-ல் 21.92 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி 2013-2014-ம் ஆண்டுகளில் 14.68 சதவீதமாக குறைந்தது. வேலை வாய்ப்புக்காக பதிவு செய்தவர்கள் 2011-ம் ஆண்டு 73 லட்சத்து 95 ஆயிரம் பேர். 2013-14-ம் ஆண்டு இதே எண்ணிக்கை 83 லட்சத்து 35 ஆயிரம் ஆக உயர்ந்துள்ளது. அரசின் நிர்வாக குறைபாடே இதற்கெல்லாம் காரணம்.

தமிழகத்தில் ஆணவக் கொலை களை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று சட்டப் பேரவையில் கோரிக்கை வைத்தபோது அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் ஆணவக் கொலைகள் நடக்கவில்லை என தெரிவித்தார். அப்போது ஸ்டாலின் கருத்து எதுவும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்தார்.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு சங் பரிவார் உள்ளிட்ட அமைப்புகள் மத்தியில் சகிப்புத் தன்மை குறைந்து வருகிறது. விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் செயல்படுகின்றனர். ஹைதராபாத் ஆய்வு மாணவர் ரோகித் வெமுலா தற்கொலைக்கு மத்திய அமைச்சரின் தூண்டுதல் தான் காரணம். இந்த மரணத்திற்கு பிரதமர் வெறும் வருத்தம் மட்டுமே தெரிவித்துள்ளார். அந்த மாணவரின் கடிதம் குறித்து எந்தக் கருத்தும் கூறாதது வருத்தம் அளிக்கிறது.

எனவே இந்த சூழலை மாற்றும் ஊழலற்ற, முறைகேடில்லாத மாற்று அரசியலை உருவாக்கும் குறைந்தபட்ச செயல்திட்டத்துடன் ஜனவரி 26-ம் தேதி மக்கள் நலக் கூட்டணி சார்பில் மாநாடு நடத்தப்பட உள்ளது. வரும் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும்.

இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் மாரிமுத்து, மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிசுபாலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x