Published : 17 Jun 2017 09:23 AM
Last Updated : 17 Jun 2017 09:23 AM

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

பெட்ரோல் லிட்டருக்கு 26 பைசாவும், டீசல் 18 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை முன்பு மாதத்துக்கு 2 முறை அதாவது 1 மற்றும் 16 ஆகிய தேதிகளில் மாற்றப்பட்டு வந்தது. இந்நிலை யில், சர்வதேச நாடுகளில் நிர்ணயிக் கப்படுவதைப் போன்று தினசரி அடிப்படையில் விலை நிர்ணயம் செய்ய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்தன.

இதன்படி, புதிய விலை நிர்ணயம் நேற்றுமுன்தினம் முதல் அமலுக்கு வந்தது. முதல் நாளன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 1.12-ம், டீசல் லிட்டருக்கு ரூ.1.24-ம் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைக்கப்பட்டது. இதன்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.67.76-க்கும், டீசல் ரூ.57.23-க்கும் விற்கப்படும். இந்த விலை குறைப்பு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x