Published : 04 Jan 2016 11:04 AM
Last Updated : 04 Jan 2016 11:04 AM

காவல்துறைக்கு நன்றி: தன்னார்வலர் ரவி சங்கர்

சுனாமி பாதிப்பிலிருந்தே மீளாத கடலூர் மாவட்டத்துக்கு எதையேனும் செய்ய நினைத்தேன். வெளிநாடு வாழ் இந்தியர்கள் உதவியுடன் 60 ஆயிரம் டாலர் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியிருக்கிறேன்.

நான் ஒரு ஒருங்கிணைப்பாளர் மட்டுமே. பேரிடரின் போது அதிர்ஷ்டவசமாக பிஎஸ்என்எல் சேவை பாதிக்கப்படவில்லை. அதனால் எல்லோருடனும் என்னால் தொடர்பில் இருக்க முடிந்தது. மதுரை, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இருந்து சிறந்த இளைஞர்கள் கடலூர் வந்து, பல இடர்பாடுகளுக்கிடையே, சைலேந்திரபாபு போன்ற நல்ல காவல்துறை அதிகாரிகளின் உதவியுடன் நிவாரணப் பொருட்கள் கொண்டுபோய் சேர்க்க உதவி செய்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

நிறைய பேர் ஓரளவுக்கு மேலே வந்தவுடன், நமக்கென்ன, நம்மால் முடிந்த ஏதாவதை கொடுத்துவிட்டு போய்விடலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் நடிகர் சூர்யா, கார்த்தி ஆகியோர் இந்த சமுதாயத்திடம் இருந்து எங்களுக்கு இவ்வளவு கிடைத்தது. அந்த சமுதாயத்துக்கு திருப்பித் தர வேண்டும் என்று செயல்பட்டு வருவது வியப்பாக இருக்கிறது. என்னால் 40 சிறந்த இளைஞர்களை திரட்ட முடிந்தது. அவர்களால் நிச்சயம் 4 ஆயிரம் பேரை திரட்ட முடியும். எல்லோருக்கும் அப்பாற்பட்டு, நாட்டில் பிரச்சினை என்று வரும்போது முன்னால் வருபவர்கள் இளைஞர்கள்தான். இவர்களால் நாடு நிச்சயம் முன்னேறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x