Published : 13 Jun 2017 02:34 PM
Last Updated : 13 Jun 2017 02:34 PM

வீடியோவில் உள்ளது நான்தான் ஆனால் குரல் என்னுடையது அல்ல: எம்எல்ஏ சரவணன் விளக்கம்

பண பேர விவகாரம் குறித்து வெளியான வீடியோவில் இருப் பது நான்தான்; அதில் பேசியது நானில்லை என மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் சசிகலா அணியில் இருந்து ஓபிஎஸ் அணிக்கு எம்எல்ஏக்கள் மாறுவதை தடுக்க, கோடிக் கணக்கில் பேரம் பேசப்பட்ட தாக தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் நேற்று முன்தினம் வீடியோ வெளியானது. அதில், ஓபிஎஸ் அணிக்கு மாறிய மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் பேசும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இது தமிழகம் மட்டுமின்றி தேசிய அரசியலையும் பரபரப் பாக்கியது. அந்த வீடியோ போலியானது என்று சர வணன் உடனடியாக மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில்,சென்னை தி.நகரில் நேற்று காலை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ‘‘சரவணனிடம் இந்த வீடியோ தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது’’ என்றார். அந்த நிகழ்ச்சி முடிந்து ஓபிஎஸ் வீட்டுக்கு சென்றதும், அவரை எம்எல்ஏ சரவணன் சந்தித்து விளக்கம் அளித்தார். சுமார் ஒரு மணி நேர சந்திப்புக்குப் பிறகு நிருபர்களை சந்தித்த சரவணன், ‘‘வீடியோ வெளி யானது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் விசாரித்தார். நடந் ததை அவரிடம் கூறினேன். அந்த சம்பவம் முற்றிலும் பொய்யானது. நான் எந்த வார்த்தையும் பேசவில்லை. கடந்த 10 நாட்களாக என் னைப் பற்றி தவறான தகவல் கள் வெளியாகி வருகிறது. அவற்றுக்கு மறுப்பு தெரி வித்துள்ளேன்’’ என்றார்.

தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்ததாவது:

நீங்கள் இருப்பது கேமராவில் பதிவாகியுள்ளதே?

நான் வேறு ஒரு நிகழ்ச்சி யில் இருந்தது. அதில் வரும் வார்த்தைகள் என் னுடையதல்ல. டப்பிங் செய் யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சி தொடர்பாக எனக்கு நினைவில்லை.

அந்த வீடியோவில் உள்ளது நீங்கள்தானே?

வீடியோவில் இருப்பது நான்தான். ஆனால், அதில் வெளியானது எனது பேச்சு கிடையாது. ஜெயலலிதா இருக்கும்போது கூட்டணி கட்சித் தலைவர்களான தமீமுன் அன்சாரி, தனியரசு, கருணாசுக்கு வாய்ப்பு கொடுத் தார். அவர்களைப் பற்றியும் நான் பேசியதாக வந்துள்ளது. அதுவும் தவறானது. அவர் களைப் பற்றி நான் பேசவே இல்லை.

ஷாநவாஸ் என்பவரை தெரியுமா?

அவர் யார் என்றே எனக்கு தெரியாது.

இது தொடர்பாக நீங்கள் புகார் அளிப்பீர்களா?

சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறேன். குற்ற வழக்கு தொடரப்படும்.

வீடியோவை வெளியிட்ட வர்கள் அதில் பேசியது நீங்கள் தான் என்று கூறுகிறார்களே?

அதில் பேசியது நானில்லை. சட்டப்படி நடவடிக்கை எடுக் கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x