Published : 15 Mar 2017 05:49 PM
Last Updated : 15 Mar 2017 05:49 PM

கோவை புறநகர் அதிமுக செயலாளராக அம்மன் அர்ஜூனன் நியமனம்: தினகரன் அறிவிப்பு

கோவை புறநகர் அதிமுக செயலாளராக இருந்த அருண்குமார் ஓபிஎஸ் அணியில் இணைந்ததால், அவருக்கு பதிலாக அம்மன் அர்ஜூனன் எம்எல்ஏவை நியமித்து அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிவிப்பில், ''கோவை புறநகர் மாவட்ட செயலாளராக இருந்த பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்எல்ஏ அப்பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார். அவருக்கு பதில், உக்கடம் பகுதி செயலாளரும் எம்எல்ஏவுமான அம்மன் மு.அர்ஜூனன் நியமிக்கப்படுகிறார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x