Published : 30 Jun 2016 08:59 AM
Last Updated : 30 Jun 2016 08:59 AM

நிர்வாகப் பணியில் தொடர்பில்லை: எழிச்சூர் பள்ளி விவகாரத்தில் ஆசிரியை தரப்பில் விளக்கம்

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத் தூர் எழிச்சூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை மாணவர்களின் பெற்றோர் முற்றுகையிட்டு கடந்த ஜூன் 6-ம் தேதி போராட்டம் நடத்தினர். இதுகுறித்த செய்தி ‘தி இந்து’ நாளிதழில் வெளியானது.

அது தொடர்பாக விளக்கம் தரும் வகையில் அப்பள்ளியின் ஆசிரியை டான்சியா பெர் னாண்டோ தமது வழக்கறிஞர் மூலம் அனுப்பிய கடிதத்தில் கூறி யிருப்பதாவது:

எழிச்சூரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியை யாக டான்சியா பெர்னாண்டோ பணியாற்றி வருகிறார். ஜூன் 6-ம் தேதி உள்ளூர் மக்கள் பள்ளி நுழைவாயிலை மறித்து பள்ளிக்கு எதிராக போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். மாணவர் களையும், ஆசிரியர்களையும் பள்ளியின் உள்ளே செல்ல அனு மதிக்கவில்லை. ஆகவே, மற்ற ஆசிரியர்களுடன் டான் சியா பெர்னாண்டோவும் பள்ளிக்கு வெளியில் நின்று கொண் டிருந்தார். அப்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சுட்டிக் காட்டி, அங்கிருந்து புறப்படு மாறு காவல் துறையினர் அறி வுறுத்தியதால் ஆசிரியர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.

இந்நிலையில், ஜூன் 7-ம் தேதி பிரசுரமான செய்தியில், 1-ம் வகுப்பில் சேர வரும் மாணவர்களை பள்ளியில் சேர்க் காமலும், 8-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மாற்றுச் சான் றிதழ் வழங்காமலும் பள்ளி தலைமை ஆசிரியையுடன் சேர்ந்து கொண்டு ஆசிரியை டான்சியா பெர்னாண்டோ செயல்பட்டதாக தவறாக கூறப்பட்டுள்ளது.

செய்தியில் குறிப்பிட்டுள்ளது போல ஆசிரியை டான்சியா பெர்னாண்டோ உதவித் தலைமை யாசிரியை பொறுப்பிலும் இல்லை. மேலும், பள்ளியின் நிர்வாகப் பணி எதுவும் அவ ருக்கு ஒதுக்கப்படவில்லை. 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் பணி மட்டுமே அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் 2013-ம் ஆண்டு 2 மாணவர்களை தேள் கடித்த போது முதலுதவி செய்யாமல் அலட்சியமாக இருந்ததற்காக ஏற்கெனவே சஸ்பெண்ட் செய் யப்பட்டவர் என கூறியுள்ளதும் சரியானது அல்ல. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x